மெட்டி ஒலி தனமா இது? அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய நடிகை காவேரி.. பின்னணியில் இவ்வளவு பெரிய கஷ்டமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு காலத்தில் தமிழ் சினிமாவிலும் சின்னத்திரையிலும் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை காவேரியின் சமீபத்திய வீடியோக்களை பார்த்து ரசிகர்கள் அதிர்ந்து போயிருக்கின்றனர். எப்படி இருந்த மெட்டி ஒலி தனம் எப்படி மாறிட்டாங்களே என்று பலர் சொல்லி வருகின்றனர். இந்த வீடியோ சில வருடங்களுக்கு முன்பு எடுத்தது ஆனால் இப்போதும் மீண்டும் இது வைரலாகி வருகிறது.

ஒரு பேட்டியில் தான் காவேரி உடல் மெலிந்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி இருக்கிறார். அதை பார்த்தது தான் ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு அதை ஷேர் செய்து வருகின்றனர். ஆனால் அவர் இப்படி எதனால் உடல் மெலிந்து போனார் என்று அவர் சொன்னதை கேட்டு அவருக்கு பலரும் ஆறுதல் சொல்லி வருகிறார்கள்.

நடிகை காவேரியின் ஆரம்ப காலம்

அதாவது கேரளாவில் சேர்ந்த காவேரி, வைதேகி பொறந்தாச்சு திரைப்படத்தின் மூலமாக தான் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். அந்த படத்தில் நடிகர் பிரசாந்துக்கு ஜோடியாக நடித்திருப்பார். அந்த முதல் படமே இவருக்கு பட்டி தொட்டி எல்லாம் ரசிகர்களை கொடுத்தது. அதற்கு பிறகு தமிழ் தெலுங்கு மலையாளம் என பலமொழிகளிலும் நடித்திருந்தார் தமிழில் காசி, கண்ணுக்குள் நிலவு, புன்னகை பூவே உட்பட பல படங்களிலும் நடித்திருந்தார்.

Kaveri Metti Oli Dhanam

சீரியலில் அறிமுகம்

ஒரு கட்டத்தில் சினிமாவில் வாய்ப்பு குறைந்தது உன் சின்னத்திரையில் அடி எடுத்து வைத்தார். சீரியல்களிலும் அடுத்தடுத்த நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் திடீரென சின்னத்திரையை விட்டு காணாமல் போனார். அதற்கு பிறகு அவர் பெரிதாக எந்த சினிமா நிகழ்ச்சிகளிலும் தலை காட்டாமல் இருந்த நிலையில்தான் சில வருடங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். அது இப்போது மீண்டும் வைரலாகி வருகிறது.

அந்த பேட்டியில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த கஷ்டங்களை பற்றி அவர் பேசியிருக்கிறார். திருமணமான காலகட்டத்திலேயே தன்னுடைய அம்மாவை இழந்தது மிகப்பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும், அதற்கு பிறகு தைராய்டு பிரச்சனையை ஏற்பட்டதால் அதிகமான உடல் எடை கூடி விட்டேன் என்று சொல்லி இருக்கிறார்.

Kaveri Metti Oli Dhanam

உடல் நல பிரச்சனை

பிறகு டாக்டர் ஆலோசனைப்படி மருந்துகளில் மாற்றம் செய்த போது உடல் எடை வேகமாக குறைந்துவிட்டதாம். ஆனால் மற்றவர்கள் எல்லோரும் டயட் ஃபாலோ பண்ணுவது போல நான் எதுவும் செய்யவில்லை, அறுவை சிகிச்சையும் செய்யவில்லை என்று சொல்லி இருக்கிறார். அதோடு மீண்டும் நடிக்க வருவீங்களா என்று கேட்ட கேள்விக்கு தொலைக்காட்சியை பார்க்கும் போது மீண்டும் நடிக்க வேண்டும் என்ற ஆசை வருவதாக சொல்லி இருக்கிறார்.

“ஹார்ட் பீட் 3”ல என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் நடிகை.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் புது ட்விஸ்ட் என்ன?
நான் இப்போது ஹீரோயினியாக நடிக்க வேண்டும் என்று ஆக கூட ஆசைப்படவில்லை. நல்ல அக்கா அல்லது அம்மா கேரக்டர் கிடைத்தால் கூட கண்டிப்பாக நடிப்பேன் என்றும் சொல்லியிருக்கிறார். மெட்டி ஒலி சீரியல் ஒளிபரப்பாகி பல வருஷம் கடந்துவிட்டாலும் அந்த சீரியலில் நடித்த நடிகர்களை இன்னும் ரசிகர்கள் மறக்கவில்லை என்பது காவேரியின் வீடியோவிற்கு ரசிகர்கள் கருத்து தெரிவிப்பதை பார்த்தாலே தெரிகிறது.

Kaveri Metti Oli Dhanam

ரசிகர்கள் கருத்து

இந்த சீரியலை எப்படிங்க மறக்க முடியும் என்று பல ரசிகர்கள் தங்களுடைய கடந்த கால வாழ்க்கையை நினைவு கூறுவதையும் பார்க்க முடிகிறது. ஸ்கூலுக்கு போயிட்டு வீட்டுக்கு வந்த சமயத்தில் நம்ம வீட்டில் டிவி இருக்கோ இல்லையோ பக்கத்து தெருவுல யாரோ ஒருவருடைய வீட்டில் டிவி இருந்தாலும், அம்மி அம்மி அம்மி மிதித்து என்று இந்த மெட்டி ஒலி சீரியல் பாடல் கேட்டாலே அவ்வளவு ஒரு எனர்ஜியாக இருக்கும்.

'மெட்டி ஒலி’ நிர்மலா ஞாபகம் இருக்கா? சினிமாவை விட்டு விலக காரணம்! இப்போ பலருக்கும் முன்மாதிரியாக மாறிட்டாங்களே
பல பேர் அடுத்த வீட்டில் போய் டிவி பார்க்கும்போது இந்த நாடகத்தை பார்த்து இருப்பார்கள். அதனாலேயே அந்த சீரியலில் நடித்த நடிகர்களை இப்போது பார்த்தாலும் பழைய ஞாபகம் எல்லாம் வருகிறது என்று தங்களுடைய இனிமையான பழைய நினைவுகளையும் பலர் பகிர்ந்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+