ரோட்டிலேயே படுத்த ராகுல் காந்தி.. டெல்லி போலீசார் கைது செய்தது எப்படி? போர்க்களமான மோடியின் இல்லம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடியின் இல்லத்தின் முன்பு இன்று போராட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவர்களை டெல்லி போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர். இந்த சமயத்தில் ராகுல் காந்தி ரோட்டிலேயே படுத்து கொண்டு கையை இறுக்கமாக மார்பில் கட்டி கொண்டு போலீசாருக்கு 'டப்' கொடுத்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

delhi-pm-residence-protest-congress-leader-rahul-gandhi-lying-down-on-road-when-police-trying-to-ar

'நீட்' குளறுபடிக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யக்கோரி நேற்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தலைமையில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

அதன்படி டெல்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தின் முன்பு இன்று மாலையில் காங்கிரஸ் கட்சியினர் திடீரென்று போராட்டம் நடத்தினர். லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்பிக்கள், மூத்த தலைவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் தர்மேந்திர பிரதான் மட்டுமின்றி தடியடிக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று கூறினர். இதையடுத்து மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், ராகுல் காந்தியிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்ல கூறினர். ஆனால் ராகுல் காந்தி அவரது கோரிக்கையை ஏற்கவில்லை.

மேலும் ஏற்கனவே பிரதமர் மோடியின் இல்லத்தை சுற்றி போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் தடையை மீறி போராட்டம் நடத்தியதாக கூறி காங்கிரஸ் தலைவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கேசி வேணுகோபால் உள்பட அங்கு போராட்டம் நடத்திய அனைவரும் குண்டுக்கட்டாக தூக்கி போலீசார் கைது செய்தனர்.

டெல்லி போலீசார் ஒவ்வொரு தலைவர்களை கைது செய்து வந்தபோது ராகுல் காந்தியை நெருங்கினர். ரோட்டில் அமர்ந்து இருந்த ராகுல் காந்தியை டெல்லி போலீசார் குண்டுகட்டாக தூக்க முயன்றனர். இதற்கு ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் போலீசார் விடவில்லை. இதனால் ராகுல் காந்தி ரோட்டிலேயே படுத்தார். கைகளை நீட்டினால் போலீசார் எளிதாக கைது செய்துவிடுவார்கள் என்பதால் ராகுல் காந்தி தனது கைகளை இறுக்கமாக சேர்த்து நெஞ்சிலேயே வைத்து கொண்டார்.

அதேபோல் 2 கால்களை பிடித்து குண்டுகட்டாக போலீசார் தூக்க முயன்றனர். ஆனால் கால்களை போலீசார் தொட்டவுடன் ராகுல் காந்தி தரையில் அழுத்தமாக வைத்து கொண்டார். இருப்பினும் போலீசார் போராடி குண்டுகட்டாக ராகுல் காந்தியை தூக்கி சென்று கைது செய்தனர். முன்னதாக ராகுல் காந்தியை டெல்லி போலீசார் கைது செய்ய முயன்றபோது அவர் தரையில் படுத்து கிடந்து எதிர்ப்பு தெரிவித்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+