தமிழர் விடுதலை படைக்கு ஆதரவு அதிகரிக்கிறது
கடலூர்:
தமிழர் விடுதலைப் படை இயக்கத்துக்கு மக்களிடம் ஆதரவு பெருகி வருகிறது என்று ரேடியோ வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
கொலை வழக்குத் தொடர்பாக ஜெயிலில் அடைக்கப்பட்டவர் ரேடியோ வெங்கடேசன். நடிகர் ராஜ்குமாரைக் கடத்திய வீரப்பன், அவரை விடுவிக்கவேண்டுமானால் ரேடியோ வெங்கடேசனை தமிழக சிறையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தார்.
வீரப்பன் விடுவிக்கக்கோரிய இந்த ரேடியோ வெங்கடேசன் கோர்ட்டில் ஆஜராக வந்த போது நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
கடந்த 83, 84 ம் ஆண்டுகளில் தனி ஈழம் வேண்டும் என்று விடுதலைப்புலிகள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது அவர்களுக்கு ஆதரவாகதமிழகத்தில் உள்ள இளைஞர்கள் ஒன்று சேர்ந்தனர்.
ஆனால் அரசோ சாதியின் பெயரால் இளைஞர்களைப் பிரித்தது. இருப்பினும் தமிழ் ஈழ விடுதலைப்புலிகளுக்கு தமிழகத்தில் சில இயக்கங்கள் தங்கள் ஆதரவைத்தெரிவித்து வருகின்றன.
மலைவாழ் மக்களின் ஆதரவு வீரப்பனுக்குப் பெருமளவு உள்ளது. இன்று தமிழக மக்கள் குறித்து நடிகர் ராஜ்குமார் நன்கு தெரிந்து கொண்டுள்ளார்.
சாதி, மதம், தீண்டாமை இன்னும் ஒழிக்கப்படவில்லை. அவை என்று ஒழிக்கப்படுகிறதோ அன்று தான் மக்களுக்கு விடுதலை கிடைத்ததாகும்.மக்களின் விடுதலைக்காகத்தான் எங்கள் இயக்கம் பாடுபட்டு வருகிறது என்றார் ரேடியோ வெங்கடேசன்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications