கோவையில் மீண்டும் வெடிகுண்டு பீதி
கோவை:
கோவையில் அதிகாலையில் மர்ம சூட்கேஸ் ஒன்று பரபரப்பு ஏற்படுத்தியது.
டிசம்பர் 6 ம் தேதி இந்தியா முழுவதும் பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் கருப்பு தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.
இதையொட்டி கோவையில் குண்டுவெடிப்புச் சம்பவம் எதுவும் ஏற்படாதவாறு பாதுகாப்பு பலப் டுத்தப்பட்டுள்ளது.
கோவை ரயில் நிலையத்தில் வெடிகுண்டு மற்றும் சமூக விரோதக் கும்பல் ஆகியவற்றைக் கண்காணிக்க போலீசார் விடிய விடிய பாதுகாப்பு பணியில்ஈடுபட்டு வந்தனர்.
அப்போது, அங்கு ஒரு சூட்கேஸ் அனாதையாகக் கி டந்தது. அப்போது இந்த சூட்கேஸ் பற்றி பயணிகளிடம் விசாரித்தனர். ஆனால் உரிய பதில்கிடைக்கவில்லை. இதனால், போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது.
இதில் வெடிகுண்டு இருக்கலாமோ என்ற சந்தேகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் அந்த இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
ரெயில்வே துணை டி .எஸ். பி தேவராஜ் உள்பட உயர் அதிகாரிகள் அந்த பெட்டியைச் சோதனை செய்தனர். அப்போது அதில், வெடிகுண்டு இல்லை எனசோதனையில் முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து அந்தப் பெட்டியைப் போலீசார் திறந்து பார்த்தனர். அதில், 16 பட்டுப் புடவைகளும், ரூ. 1500 ரொக்கம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இந்த பெட்டியை திறந்து சோதனை நடத்திக் கொண்டிருக்கும் போது அலறி அடித்துக் கொண்டு ஒரு பெண் ஓடி வந்தார்.
அந்த சூட்கேஸ் தன்னுடையது தான் எனவும், மொத்தம் 15 சூட்கேஸ்கள் கொண்டு வந்ததில் இது மட்டும் தவறி விட்டதாகவும் கூறினார். கல்பனாடோயா என்ற அந்த பெண் இந்த சூட்கேஸ்களை திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு எடுத்துச் செல்வதாகக் கூறினார்.
போலீஸாருக்கு வந்த மிரட்டல்
கோவையில் நான்கு இடங்களில் குண்டு வெடிக்கும் என போலீசாருக்கு வந்த மர்ம போன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து தீவிர வாகன சோதனையில் போலீசார், அதிரடிப்படை, ஊர்க்காவல் படையினர் உள்பட மாணவர்களும் ஈடுபட்டனர்.
பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6ம் தேதி, போலீசார் பலத்த முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை கோவையில் மேற்கொண்டனர்.
இருந்த போதிலும், கோவையில் நான்கு இடங்களில் குண்டு வெடிக்கும் என மர்ம போன் போலீசாருக்கு வந்தது.
காந்திபுரத்தில் ஒரு டவுன் பஸ்சிலும், மாருதிக் காரிலும், ஒப்பணக்கார வீதியிலும், ஒரு மணியிலிருந்து இரண்டு மணிக்குள் குண்டு வெடிக்கும் எனக் கூறி வைத்துவிட்டான்.
இந்த மிரட்டல் பற்றி அறிந்ததும் போலீசார் உஷாரடைந்தனர். இதனையடுத்து போலீசார் நகர் முழுவதிலும் தீவிர சோதனைக்குத் தயாராயினர்.
அனைத்து வாகனங்களையும் மாலை வரை சோதனையிட்டனர். இந்த சோதனைப் பணியில் அதிரடிப் படையினர், ஊர்க்காவல் படையினர், போலீசார் மற்றும்மாணவர்கள் ஈடுபட்டனர்.
ஆனால், வெடிகுண்டு எங்கும் கண்டு பிடிக்கப்படவில்லை. இருந்தாலும் மாலை வரை சோதனை தொடர்ந்து வருகிறது. மேலும், டெலிபோனில் மிரட்டல்விடுத்த ஆசாமியைப் பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications