இலங்கையில் இந்தியா ஆடைகள் கண்காட்சி
கொழும்பு:
இந்தியா மற்றும் இலங்கையின் வர்த்தக உறவை மேம்படுத்தும் வகையில் தலைநகர் கொழும்பில், இந்திய ஆடைகள் கண்காட்சி புதன்கிழமைதொடங்கியது.
இந்திய சிந்தடிக் மற்றும் ரேயான் ஆடைகள் ஏற்றுமதி உயர்வு கவுன்சில் மையம் மற்றும் இலங்கை ஆடைகள் நிறுவனமும் இணைந்து இந்தக்கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இலங்கை மக்களிடையே இந்தியா ஆடைகள் குறித்தும், குறிப்பாக காட்டன் வகை ஆடைகள் குறித்தும் தெரிய வைக்கும் விதத்தில் இந்த கண்காட்சிதொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சி தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும்.
கண்காட்சி தொடக்க விழாவில் இலங்கை சர்வதேச வர்த்த அமைச்சர் ராப் ஹக்கீம் மற்றும் இந்திய தூதரக அதிகாரி கோபால கிருஷ்ண காந்திஆகியோர் கலந்து கொண்டனர்.
கண்காட்சியில் இந்தியாவின் நவீன ரக புதிய டிசைன்கள் கொண்ட சிந்தடிக் மற்றும் ரேயான் ஆடைகள் கண்ணைக் கவரும் விதத்தில் இடம்பெற்றிருந்தன.
25 இந்திய நிறுவனங்கள்:
பாம்பே டையிங், இந்தியன் ரேயான், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், விஜய சில்க், எஸ்.குமார், ராஜஸ்தான் ஸ்ப்பின்னிங் மற்றும் வீவிங் மில் உள்பட 15 க்கும்மேற்பட்ட இந்திய நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
இது குறித்து கண்காட்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள் கூறுகையில், இது போன்ற கண்காட்சிகளால் இந்தியா-இலங்கை வர்த்தக உறவு மேம்படும்.
இதன் மூலம் இரு நாடுகளும் வர்த்தக ஒப்பந்தங்களையும் ஏற்படுத்திக் கொள்ளலாம். இதனால் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு ஏற்றுமதியாகும்ஆடைகளின் அளவும் அதிகரிக்கும் என்றனர்.
யு.என்.ஐ.


Click it and Unblock the Notifications
