தீவிரவாதிகளை அடக்குங்கள்: பாகிஸ்தானுக்கு ஈரான் அறிவுரை
துபாய்:
இந்தியாவுடன் உண்மையாகவே பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயாராக இருந்தால் முதலில் தனது நாட்டில்இருந்து கொண்டு செயல்பட்டு வரும் காஷ்மீர் தீவிரவாதிகளை பாகிஸாதன் தடுத்து நிறுத்த வேண்டும் என ஈரான்அறிவுரை கூறியுள்ளது.
ஈரானின் முக்கிய நாளிதழான கேகான் இன்டர்நேசனல் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைதிஏற்பட பாகிஸ்தான் உண்மையிலேயே முயற்சிக்க வேண்டும். ரம்ஜான் மாதத்தில் இந்திய அரசு போர் நிறுத்தத்தைஅறிவித்து மிகவும் சிறப்புக்கு உரியது. இதை பாகிஸ்தான் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
காஷ்மீர் மக்களின் உணர்வுகளைப் புறக்கணித்துவிட்டு அந்த மாநிலத்தை தனது நாட்டுடன் இணைத்துக் கொள்ளவேண்டும்என பாகிஸ்தான் நினைக்கிறது. இது முட்டாள்தனமானது. காஷ்மீர் பிரச்சனையை எளிதில் தீர்த்துவிடமுடியாது. அந்த மாநில மக்களின் நலனை கருத்தில் கொண்டு மனிதாபிமானத்துடன் தான் இந்த பிரச்சனையைஅணுக வேண்டும்.
இந்தியாவுக்குப் பாராட்டு:
காஷ்மீர் முஸ்லீம்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவில் வசிக்கும் 200 மில்லியன் முஸ்லீம்களுக்கும் இந்திய அரசு சமஉரிமை அளித்துள்ளது. மதசார்பின்மையைக் கடைபிடித்து அனைத்து உரிமைகளையும் அளித்துள்ளது இந்தியாஎன அந்த நாளிதழ் கூறியுள்ளது.
பாகிஸ்தானின் வெறி:
அதே நேரத்தில் பாகிஸ்தானின் வெறித்தனம் அடங்கியதாகத் தெரியவில்லை.
இந்தியாவுடன் நாங்களும் (பாகிஸ்தான் அரசு) தீவிரவாத அமைப்புகளும் பேச விரும்புகிறோம். ஆனால்,எங்களை பேச்சுவார்த்தையில் சேர்த்துக் கொள்ள இந்தியா மறுத்து வருவது வருத்தம் தருகிறது என பாகிஸ்தானின்ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப் கூறியுள்ளார்.
தீவிரவாதிகள் உடன் மட்டுமே பேசுவோம். காஷ்மீருக்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாத பாகிஸ்தானுடன்பேச்சே நடத்த மாட்டோம் என இந்தியா தெரிவித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுடன் பேசத் தயார் என்று பர்வேஸ் கூறியதற்கு பிரதமர் வாஜ்பாய் பதிலளிக்கவில்லை. தனதுவெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கை விட்டுத் தான் பதில் சொன்னார். இதன் மூலம் முஷாரபுக்கு தான்முக்கியத்துவமே கொடுக்கவில்லை என்பதையும் இந்தியா மறைமுகமாக எடுத்துச் சொல்லிவிட்டது. இதையும்பாகிஸ்தான் பெரிய தவறாக கூறி வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications