கள்ளச் சாரயம் விற்றதை தட்டிக் கேட்ட 2 பெண்கள் படுகொலை
சென்னை:
திருவள்ளூர் அருகே கள்ளச்சாரயம் விற்பதை தடுத்த இரண்டு பெண்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். மேலும் ஏழுபேர்காயமடைந்தனர்.
திருவள்ளூர் அருகே பீமன் தோப்பு என்ற காலனி உள்ளது. அந்த காலணியைச்சேர்ந்தவர் யசோதா. இவர் மாதர் சங்கத்தை சேர்ந்தவர்.அருகில் உள்ள கொரட்டூர் தண்டலம் பகுதியைச் சேர்ந்த நாகராஜன் என்பவனும் மேலும் சிலரும் சாராயம் காய்ச்சி விற்று வந்ததாககூறப்படுகிறது.
கள்ளச் சாராயத்தைக் குடித்த கூலித்தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால் மாதர் சங்கத்தைச்சேர்ந்த யசோதாவும் மற்றும்சிலரும் நேற்று நாகராஜனைச் சந்தித்து கள்ளச் சாரயம் விற்பதை நிறுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.
இதனைத்தொடர்ந்து, நாகராஜன் தன்னுடைய சொந்த ஊரான கொரட்டூர் தண்டத்துக்கு சென்று அடியாட்களை அழைத்துக்கொண்டு திரும்பிவந்திருக்கிறார். மாதர் சங்கதலைவி யசோதாவை சந்தித்துப் பேசியிருக்கிறார்கள்.
எங்களை சாராயம் விற்காமல் தடுப்பதற்கு நீ யார்? என்று கோபத்தோடு பேசியிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து இரு பிரிவினரிடையேவாக்கு வாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. நாகராஜன் கும்பல் யசோதாவையும் அவருடைய குடும்பத்தினரையும் சரமாரியாகதாக்கியது.
இதில் யசோதாவின் சகோதரி ரத்தினம்மாள் வயது 50, யசோதாவின் மகள் இந்திராணி வயது 20 ஆகியோர் அதே இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பிணமானார்கள். கொலைக்கும்பல் தப்பி ஓடிவிட்டது.
தாக்குதலல் ரத்தினம்மாளின் கணவர் சாமிநாதன், மகன் புருஷோத்தமன் வயது 35, தனசேகர், குமார் ஏழுமலை, வீராச்சாமியின் மகன்ராமநாதன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் திருவள்ளூர் அரசு மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில் சாமிநாதன் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. இவர் தற்பொழுது சென்னை பொது மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளார்.
தகவல் கிடைத்ததும், மாவட்ட காவல்துறை அதிகாரி நல்லசிவம் அப்பகுதிக்கு போலீஸ் படையுடன் விரைந்து சென்றார்.கொலையாளிகளை பிடிக்க தனி போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது. நாகராஜனையும் அவனது கூட்டாளிகளையும் போலீஸார்தேடிவருகின்றனர்.
போலீசாருக்குத் தெரியாமல் இந்த கள்ளச் சாராய கும்பல் செயல்பட்டிருக்க வாய்ப்பில்லை என அப் பகுதி பொது மக்கள் கூறுகின்றனர்.இந்த கள்ளச் சாராய கும்பலுக்கு அரசியல் ஆதரவும் இருந்து வருவதாகத் தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications