வளரும் நாடுகளை ஏய்க்கும் அமெரிக்கா, ஜப்பான்
வாஷிங்டன்:
சர்வதேச அளவில் முறையில்லாத வர்த்தகத்தில் ஈடுபடுவதாக அமெரிக்கா, ஜப்பான், கனடா, ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்குஉலக வங்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
உலக வங்கி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இந்த நாடுகளை ஒரு பிடி பிடித்துள்ளது.
இந்த நாடுகளின் ஏற்றுமதி மிக அதிக அளவில் உள்ளது. பல முறையில்லாத வர்த்தக முயற்சிகள் மூலம் தான் இவை அதிகமானஏற்றுமதி செய்து வருகின்றன. வளர்ச்சியடைந்த நாடுகள் தங்களுக்குள் தான் அதிக அளவில் பொருள்களை வாங்கிக்கொள்கின்றன.
வளரும் நாடுகளிமிருந்து பொருள்களை இறக்குமதி செய்வதைத் தவிர்க்கின்றன. இதனால் வளரும் நாடுகளின் ஏற்றுமதிஅதிகரிக்கவில்லை. ஆனால், வளரும் நாடுகளுக்கு இந்த வளர்ச்சியடைந்த நாடுகள் அதிக அளவில் ஏற்றுமதி செய்கின்ற.இதனால் மூன்றாம் உலக நாடுகளின் இறக்குமதி தான் அதிகரித்துள்ளது.
ஒருதலைப்பட்சமான வர்த்தக விதிகளால் தான் வளர்ச்சியடைந்த நாடுகள் தங்களுக்கு சாதகமான வியாபாரத்தை உலகெங்கும்மேற்கொண்டுள்ளன.
வளர்ச்சி அடைந்த நாடுகள் தங்களுக்குள் விற்றுக் கொள்ளும் பொருள்களுக்கு வெறும் 4 முதல் 8 சதவீதம் தான் வரி விதித்துக்கொள்கின்றன. ஆனால், வளரும் நாடுகள் ஏற்றுமதி செய்யும் பொருள்களுக்கு 550 சதவீதம் வரை வரி விதிக்கின்றன.
அமெரிக்காவைப் பொருத்தவரை காய்கறிகள், பழங்கள், ஆடைகள், ஜவுளிகள் ஆகியவற்றுக்கான வரி 100 சதவீதத்துக்கும்அதிகமாக உள்ளது. இது தவிர கோட்டா கட்டுப்பாடுகள் உள்பட பல நிபந்தனைகளை விதித்து வளரும் நாடுகளின் ஏற்றுமதியைஅமெரிக்கா தடுக்கிறது.
விவசாயப் பொருள்கள், உணவுப் பொருகள் உற்பத்தியில் தான் மூன்றாம் உலக நாடுகள் முன்னணியில் உள்ளன. இதைத் தான்அவை ஏற்றமதி செய்து பிழைக்க வேண்டும். ஆனால், பல காரணங்களையும் விதிகளையும் காட்டி இந்த ஏற்றுமதிகளை தடுப்பதுஎன்பது வளரும் நாடுகளின் வளர்ச்சிக்கும் செய்யப்படும் தீங்காகும். இது அந்நாடுகளுக்கு உள்ள உரிமையைத் தடுப்பதுபோன்றது.
இதனால் மிக ஏழ்மை நிலையில் உள்ள நாடுகள் மேலும் மேலும் ஏழ்மைக்குத் தள்ளப்படுகின்றன. இந்த நியாயமற்ற வர்த்தகப்போக்கை அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகள், கனடா ஆகியவை கைவிட்டால் தான் வளரும் நாடுகளுக்கு கிடைக்கவேண்டிய நியாயமான வர்த்தக உரிமைகள் கிடைக்கும்.
இவ்வாறு உலக வங்கி தனது அறிக்கையில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications