சோனியாவை எச்சரிக்கும் மூத்த காங். தலைவர்கள்
டெல்லி:
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் அது முஸ்லீம்களுக்கு ஆதரவான நிலையை ஏற்படுத்தி விடும் என்று சோனியாகாந்திக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அயோத்தியில் 1992 ம் வருடம் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதையடுத்து பாபர் மசூதி இடிப்புச் சம்பவத்தின் போது அயோத்தியில் இருந்த மத்தியஅமைச்சர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் உமா பாரதி ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று முக்கிய எதிர்க்கட்சியானகாங்கிரஸ் கட்சி கூறியது.
இதையடுத்து, பாரதிய ஜனதா கட்சி இவ்விவகாரத்தை திசை திருப்பும் முயற்சியில் இறங்கி விட்டது. அதாவது கோவில் கட்டுவதற்கு காங்கிரஸ் எதிர்ப்புதெரிவித்தால், காங்கிரஸ் கட்சி ஹிந்துக்களுக்கு எதிரானது. முஸ்லீம்களுக்கு ஆதரவானது என்ற முத்திரையை குத்த பாரதிய ஜனதா முயல்கிறது. இது தான்பாஜக வின் தந்திரமான மனநிலை.
ஏற்கனவே விஸ்வ ஹிந்து பரிஷத் பொதுச் செயலாளர் பிரவீண் டோகாடியா வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் கட்சி ஹிந்துக்களுக்கு எதிராகசெயல்படுகிறது. சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆனவுடன் ஹிந்துக்கள் கவனிப்பாரற்று இருக்கின்றனர்.
காங்கிரஸ் கட்சி முஸ்லீம்களுக்கு ஆதரவாகச் செயல் படுகிறது என்று கூறியுள்ளார். இது நாட்டில் உள்ள பெரும்பான்மையான ஹிந்துக்களைப் பாதிக்கும்வகையில் உள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.
மேலும் இன்னொரு காங்கிரஸ் தலைவர் கூறுகையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற பிரதமரின் கருத்தை ஆட்சேபணை செய்யவேண்டிய கட்டாயமோ அவசியமோ எதுவும் இப்போது இல்லை.
தற்போது நாம் எதிர்ப்பு தெரிவித்து, நாளை முஸ்லீம் அமைப்பினர் இதற்கு சம்மதம் தெரிவித்தால் என்ன செய்வது? இப்போது இதை எதிர்த்தால், பின்னாளில்நமக்குப் பாதிப்பு ஏற்படும் என்பது உண்மை என்றார்.
இன்னொரு தலைவர் கருத்துத் தெரிவிக்கையில், காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையினரான ஹிந்துக்களின் வெறுப்பையோ, விரோதத்தையோ சம்பாதிக்கக்கூடாது. அயோத்தி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி நடுநிலையைக் கையாள வேண்டும். ஏனெனில் காங்கிரஸ் கட்சி அரசியலில் இன்னும் ஒளி விட வேண்டும்என்று கூறியுள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications