வீரப்பனைப் பிடிக்க வருகிறார் விஜயகுமார்
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்க தமிழ்நாட்டைச் சேர்ந்த எல்லைப் பாதுகாப்பு படை ஐ.ஜி. யான கே.விஜயகுமார் வெள்ளிக்கிழமை தனி விமானம்மூலம் சென்னை வருகிறார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரி விஜயகுமார். இவர் தமிழ்நாட்டில் பல்வேறு பொறுப்புகளில் திறம்பட பணியாற்றியிருக்கிறார். மிகவும் துணிச்சலான,நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்தவர்.
தென் மாவட்டங்களில் ஜாதிக்கலவரம் தலை விரித்தாடியபொழுது கிராமப் பகுதிகளில் துணிச்சலாக பணியாற்றி கலவரத்தை இவர் பொறுப்பெற்ற சிலதினங்களிலேயே கட்டுக்குள் கொண்டு வந்தவர்.
ராஜீவின் பாதுகாப்பு அதிகாரி:
ராஜீவ்காந்தி பிரமராக இருந்த பொழுது அவருக்கு பாதுகாப்பு அதிகாரியாக இருந்தவர். அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதாவின் பாதுகாப்புபிரிவான எஸ்.எஸ்.ஜி படைக்கு ஐ.ஜி.யாகப் பணியாற்றியவர்.
இரும்புக்கரத்தால் கலவரத்தை அடக்கியவர்:
தி.மு.க ஆட்சி வந்தவுடன் தென் மாவட்ட கலவரங்களை அடக்குவதற்காக ஸ்பெஷலாக முதல்வர் கருணாநிதியால் நியமிக்கப்பட்டார். கலவரத்தைஅடக்கி முதல்வரால் பாராட்டையும் பெற்றவர்.
மத்திய எல்லைப் பாதுகாப்புப் படை யின் ஐ.ஜி.யாக பொறுப்பேற்க மத்திய அரசிடம் இருந்து ஸ்பெஷல் அழைப்பு வர, பி.எஸ்.ஃஎப் - படையின் ஐ.ஜியாகபொறுப்பேற்றுக் கொண்டார்.
கார்கில் கலவரத்தில்:
கார்கில் யுத்தம் நடந்து கொண்டிருந்த பொழுது, காஷ்மீர் பகுதியில் பி.எஸ்.ஃஎப் படையின் மூலமாக தீவிரவாதிகளை கண்காணித்து வந்தவர். காஷ்மீர்தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை மிகத் தீவிரமாக செயல்பட்டு கட்டுக்குள் கொண்டு வந்தவர்.
தற்பொழுது டெல்லியில் எல்லைப் பாதுகாப்பு படை ஐ.ஜியாக பணிபுரியும் கே.விஜயகுமாரை சந்தனக் கடத்தல் வீரப்பனை பிடிக்க மத்திய அரசு நியமித்துள்ளது.
டெல்லியில் இருந்து எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களுடன் விஜயகுமார் வெள்ளிக்கிழமை தனி விமானம் மூலம் சென்னை வருகிறார். எல்லைப்பாதுகாப்பு படை விமானத்தில் டெல்லியில் இருந்து கோயம்புத்தூர் வந்து இறங்குகிறார் விஜயகுமார்.
வீரப்பனை பிடிக்க ஐ.ஜி விஜயகுமார் வருவது அதிரடிப் படையினருக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது. இரு மாநில அதிரடிப்படையினரின் செயல்பாடுகளையும்,கஷ்டங்களையும் மிகவும் ப்ராக்டிகலாக உணர்ந்த அதிகாரி விஜயகுமார்.
ஜெ. அறிக்கை:
சில தினங்களுக்கு முன்பு, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, வீரப்பனை பிடிக்க விஜயகுமாரை காட்டிற்கு அனுப்ப வேண்டும் என்று அறிக்கைவெளியிட்டதும் குறிப்பிடத்தக்க ஒன்று.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications