தமிழகத்தைக் கலக்கும் தீவிரவாதிகளின் வெப்சைட்
சென்னை:
வீரப்பன் விவகாரத்தில் லேட்டஸ்ட் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது தமிழ் நாடு விடுதலைப் படையின் வெப் சைட்.
சில நாட்களுக்கு முன் தான் இந்த வெப்சைட் தொடங்கப்பட்டிருக்கிறது. என்ற இந்த வெப்சைட் பெரும்பிரச்சனையைக் கிளப்பியிருக்கிறது. தமிழகம், இலங்கையில் யாழ்பாணம் மட்டுமல்லாமல், கேரளா, லட்சத் தீவுகள், மொரீசியஸ்,கர்நாடகத்தில் கோலார் ஆகிய நாடுகள், மாநிலங்கள், மாவட்டங்களை இணைத்து அகண்ட தமிழகத்தை உருவாக்குவோம் எனஅதில் சூளுரைக்கப்பட்டிருக்கிறது.
இது தவிர ஆப்கான் தீவிரவாதி ஒசாமா பின் லேடன் முதல் லோக்கல் தீவிரவாதிகளான மாறன் வரை அனைவருக்கும் வாழ்த்தும்தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அண்ணன் சந்தன வீரப்பனுக்கும் அதீத முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவரை லெபடினண்ட் கர்ணல் ரேஞ்சுக்குஉயர்த்தியிருக்கிறது இந்த வெப்சைட்.
இந்த வெப்சைட்டைக் காரணம் காட்டி தமிழகத்தில் கருணாநிதி அரசையே கலைக்கச் சொல்கிறார் ஜெயலலிதா.
இதையடுத்து விழித்து எழுந்திருக்கிறது தமிழக போலீஸ்.
போலீஸ் நடவடிக்கை:
இது பற்றி, தமிழக போலீஸ் டி.ஜி.பி ராஜகோபாலன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், பிரிவினை வாதத்தை ஆதரித்துதமிழ்நாடு விடுதலை முன்னனி என்ற அமைப்பிற்கென இணையதள பக்கம் ஒன்றை என்ற முகவரியைக் கொண்ட இணையதளம்அளித்துள்ளதாக மக்கள் தொடர்பு சாதனங்களில் செய்தி வெளி வந்துள்ளது.
இது பற்றிய விபரம் ஏற்கனவே தமிழ்நாடு காவல்துறையினர் கவனத்திற்கு வந்துள்ளது. அதன் அடிப்படையில் இதர பிரிவு 124(ஓ) மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் பிரிவு 13 (1) (ஏ) (பி) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்துவிசாரணை செய்து வரப்படுகிறது.
முகல்ஸ்தான், சூத்ரஸ்தான், தலித்ஸ்தான் மற்றும் திராவிடஸ்தான் ஆகியவற்றின் வரைபடங்களைக் கொண்ட இந்த இணையதளம்அகில இந்திய தாக்கமுடையதாகத் தெரிகிறது. வெல்பர் மேனுவல்ஸ் என்று இந்த இணையதளப்பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளதலைப்பு இஸ்லாமிய அடிப்படைவாத ஆதாரமான முகல்ஸ்தான் - ஜங்க் என்ற இணையதளத்தின் இணைப்பாகும்.
எனவே, இவ்வழக்கு விசாரணை தொடர்பாக மத்திய அரசு நிறுவனங்களின் உதவியும் கோரப்பட்டுள்ளது. இவ்வாறு டி.ஜி.பிராஜகோபாலன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications