அமெரிக்க அதிபர் தேர்தல் குழப்பங்கள் தீருமா?
டல்லஹஸ்ஸி:
அமெரிக்க அதிபர் தேர்தல் குழப்பத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் ஃபளோரிடா மாகாண உச்ச நீதிமன்ற சனிக்கிழமை தீரப்பு வழங்க இருக்கிறது.
அமெரிக்காவின் 43-வது அதிபரை தேர்ந்தெடுக்க சென்ற மாதம் 7-ம் தேதி தேர்தல் நடந்தது.
எல்லா மாகாணங்களிலும் எந்த விதமான பிரச்சனையும் இல்லாமல் ஓட்டு எண்ணிக்கை சுமுகமாக நடந்து முடிந்தது. ஃப்ளோரிடா மாகாணத்தில் மட்டும்ஓட்டு எண்ணிக்கையில் குழப்பம் ஏற்பட்டது.
இதன் காரணமாக தேர்தல் முடிந்து ஒரு மாதமாகியும் இன்னும் முடிவு எதுவும் ஏற்படாமல் உள்ளது.
அமெரிக்க உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அந்த மாகாண ஓட்டு எண்ணிக்கை முடிவு அறிவிக்கப்பட்டதில் குடியரசு கட்சியின் வேட்பாளர் ஜார்ஜ் புஷ் முன்னணியில்இருந்தார்.
ஆனால் ஜனநாயக கட்சி வேட்பாளர் அல் கோர் ஃப்ளோரிடா மாகாணத்தில் நடை பெற்ற தேர்தல் குழப்பங்களை கண்டித்து நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை வியாழக்கிழமை நடந்தது. இரு தரப்பினரும் தங்கள் வாதங்களை எடுத்துரைத்தனர். இதையடுத்து வழக்கின தீர்ப்புசனிக்கிழமை வழங்கப்பட இருக்கிறது.
இந்த தீர்ப்பில் பிரச்சனைக்குரிய ஃப்ளோரிடா மாகாணத்தின் எல்லா ஓட்டுகளையும் திரும்ப எண்ணுவதா அல்லது பிரச்சனைக்குரிய இடங்களில் மட்டும் ஓட்டுஎண்ணிக்கையை மட்டும் நடத்துவதா என்பது பற்றி முடிவு தெரியும்.
தீர்ப்பில் மீண்டும் ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டால் அது அல் கோருக்கு சாதமாக அமையும். முன்பு எண்ணப்பட்ட ஓட்டுஎண்ணிக்கை சரியானது என தீர்ப்பு வழங்கப்பட்டால் அது ஜார்ஜ் புஷ்ஷுக்கு சாதமாக அமையும்.












Click it and Unblock the Notifications