தமிழ் தீவிரவாதிகள் காவல் நீட்டிப்பு
Subscribe to Oneindia Tamil
பவானி:
வீரப்பன் விடுவிக்கக் கோரிய தமிழ் தீவிரவாதிகளின் காவலை நீதிமன்றம் நீடித்துள்ளது.
வெள்ளித் திருப்பூர் போலீஸ் ஸ்டேஷன் கொள்ளையையடுத்து இது தொடர்பாக நக்சல் இயக்கத்தைச் சேர்ந்த 5பேரைப் போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் அனைவரும் திருச்சி சிறையில் இருந்து வருகின்றனர். முத்துக்குமார், சத்திய மூர்த்தி, மணிகண்டன்ஆகியோர் வெள்ளிக்கிழமை காவல் நீட்டிப்புக்காக பவானிக் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டனர்.
இவர்கள் ஆஜர் செய்யப்படுவதைத் தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டது.3 பேரும் பேட்டியளிக்கவோ, நிருபர்களைச் சந்திக்கவோ அனுமதி மறுக்கப்பட்டு விட்டது.












Click it and Unblock the Notifications