மட்டக்களப்பிலிருந்து டாக்டர்கள் ஓட்டம்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கையின் கிழக்குப் பகுதியில் உள்ள மட்டக்களப்பில் நடந்த கண்ணி வெடித்தாக்குதலில் டாக்டர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து அங்கு வாழும் பிற டாக்டர்கள்உயிருக்குப் பயந்து அங்கிருந்து வெளியேறத் தொடங்கியுள்ளனர்.

மட்டக்களப்பு அரசு டாக்டர்கள் சங்கம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 25 க்கும் மேற்பட்ட அரசு டாக்டர்கள் பணிபுரிந்து வந்தனர். இங்கு சமீபத்தில் பயணிகள் சென்ற பஸ்சை விடுதலைப்புலிகள் கண்ணிவெடி வைத்துத் தகர்த்தனர். இச்சம்பவத்தில் அரசு டாக்டர்கள் 4 பேர் காயமடைந்தனர். அவர்களில் ஒரு டாக்டர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதையடுத்து அங்கு வேலை செய்யும் டாக்டர்கள் அனைவரும் தலைநகர் கொழும்பிற்குச் செல்லத் திட்டமிட்டுள்ளனர். பெரும்பாலான டாக்டர்கள் உயிருக்குப்பயந்து ஏற்கனவே கொழும்பு சென்று விட்டனர்.

புலிகள் நடமாட்டம் அதிகம் இருக்கும் கிழக்கு மட்டக்களப்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் பணிபுரியும் டாக்டர்களுக்கு அதிக சலுகைமற்றும் மாதந்தோறும் ரூ 10,000 கொடுத்தால் மட்டுமே டாக்டர்கள் அங்கு பணிபுரிய முடியும்.

மேலும் டாக்டர்களுக்கு மருத்துவமனைக்கும், அவர்களது வீடுகளுக்கும் செல்லும் வகையில் சிறந்த போக்குவரத்து வசதி செய்து கொடுக்கவும் அரசுமுயற்சி எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

திரிகோணமலை, அம்பாரா பகுதிகளில் வசிக்கும் டாக்டர்களும் அங்கிருந்து உயிருக்குப் பயந்து வெளியேறும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, இலங்கையில் தனி ஈழம் கேட்டுப் போராடி வரும் விடுதலைப்புலிகள் கடந்த வாரம் இரண்டு இடங்களில் பஸ்களை கண்ணி வெடி வைத்துத் தகர்த்தனர்என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+