தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தம் 5 வது நாளாக நீடிக்கிறது
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் சனிக்கிழமையுடன் 5 வது நாளாகத் தொடர்கிறது.
டெல்லி, மும்பை, கல்கத்தா, சென்னை உள்பட அனைத்து நகரங்களிலும் தபால் நிலையப் பணிகள் அடியோடு ஸ்தம்பித்தன.
இதையடுத்து நாடு முழுவதும் கோடிக்கணக்கான தபால்கள் தேங்கிக் கிடக்கின்றன. தவிரவும் தபால் அலுவல்கள் முடங்கிக் கிடக்கின்றன.
பாரதிய தபால் ஊழியர்கள் சம்மேளன தலைவர்கள் கூறுகையில், தல்வார் கமிட்டியின் பரிந்துரைகளை மத்திய அரசு நிறைவேற்றும் வரை எங்கள்போராட்டத்தைக் கைவிடுவதாக இல்லை என்றனர்.
முன்னதாக, கடந்த திங்கள்கிழமை முதல் நாடு முழுவதும் தபால் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சம்பள உயர்வு, பதவி உயர்வு,தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தரப் பணி நியமனம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தைக்கடைபிடித்து வருகின்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications