விசாரணை தொடர்ந்தால் ஊழல்கள் வெளிவரும்: அலிஈரானி

Subscribe to Oneindia Tamil

மும்பை:

கிரிக்கெட் சூதாட்டம் பற்றி மேலும் விசாரணை நடத்தினால் இன்னும் பல ஊழல்கள் வெளி வரும் என இந்தியஅணியின் முன்னாள் மருத்துவர் அலி ஈரானி தெரிவித்துள்ளார்.

அலி ஈரானி இந்திய கிரிக்கெட் அணிக்கு மருத்துவராக பணியாற்றி வந்தவர். அப்போது கிரிக்கெட் சூதாட்டத்தில்ஈடுபட்டவர்களுக்கு சூதாட்ட பணத்தை ஏஜென்டுகள் இவர் மூலமாக கொடுத்தனர் என கண்டு பிடிக்கப்பட்டது.

இதனால் 5 ஆண்டுகளுக்கு கிரிக்கெட் அணிக்கு மருத்துவராக பணியாற்ற கூடாது என கிரிக்கெட் வாரியம் தடைவிதித்தது. தன் மீது கிரிக்கெட் வாரியம் எடுத்துள்ள நடவடிக்கை பற்றி அலி ஈரானி கூறுகையில், மேட்ச் ஃபிக்சிங்மற்றும் சூதாட்டம் தொடர்பாக சி.பி.ஐ மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தினால் பல உண்மைகள் வெளிவரும்.

மாதவன் கொடுத்த அறிககை எனக்கு திருப்தி அளிக்கவில்லை. சி.பி.ஐ. அறிக்கை சரியானதே என மாதவன்அறிக்கையில் தெரிவிக்கப்ட்டுள்ளது. இது உண்மை என்றால் மேலும் பல குற்றவாளிகளை பிடிக்க முடியும். அதற்குவிசாரணை தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்.

நான் அனைவருடனும் நட்பாக பழகி வந்ததால் என் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.நான் 10 ஆண்டுகள் இந்தியகிரிக்கெட் அணியின் மருத்துவராக பணியாற்றியதே நான் சிறப்பாக பணியாற்றியதற்கு சான்று.

நான் இந்திய அணியை விட்டு 1997-ம் ஆண்டே விலகி விட்டேன். கிரிக்கெட் வாரியத்தின் தடை என்னை எந்தவிதத்திலும் பாதிக்காது.

நான் ஒரு நாளைக்கு 200 நோயாகளுக்கு சிகிச்சை அளிக்கிறேன். எனக்கு வேறு எதை பற்றி சிந்திக்கவும் நேரம்கிடையாது. கிரிக்கெட் வாரியத்தின் தீர்ப்பு குறித்து நான் நீதிமன்றத்திற்கு போகப் போவதில்லை. மக்கள்மன்றத்திற்கு போகப் போகிறேன் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+