சோனியா - திமுக எம்பிக்கள் சந்திப்பு
டெல்லி:
அரசியல் சட்ட திருத்த மசோதாவுக்கு ஆதரவு கேட்டு திமுக எம்பிக்கள், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்துப் பேசினர்.
மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற எம்பிக்கள் தொகுதியை 2026 ம் ஆண்டு மாற்றியமைக்க வேண்டும் என்று மத்திய அரசு முடிவு செய்தது.
தற்போது 2011 ம் வருடம் ஆண்டில் மாற்றி அமைப்பதற்கான சட்டதிருத்தத்தை கொண்டு வர மத்திய அரசின் ஆய்வுக்குழு தீர்மானித்திருக்கிறது.
தொகுதிகள் குறையும்:
இவ்வாறு மாற்றியமைத்தால் தமிழகத்தில் தற்போது 39 எம்.பி.தொகுதிகள் 36 ஆகக் குறைந்து விடும். இதற்கு திமுக எதிர்ப்புத் தெரிவிக்கிறது.
தெலுங்கு தேசம் கட்சியும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. எனவே எம்பிக்கள் தொகுதியை 2026 ம் வருடம் மாற்றியமைக்க வழிசெய்யும் வகையில்அரசியல் சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, எஸ்.டி.சண்முகம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications