மதுரையில் கவுண்டர்கள் மாநாடு
மதுரை:
அனைத்துக் கவுண்டர்கள் நலச் சங்க மாநாடு மதுரையில் வரும் 13ம் தேதிநடைபெறவுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அனைத்துக் கவுண்டர்கள் நலச் சங்கத்தின் தலைவர்கோபால்கவுண்டர் கோவையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மதுரையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கவுண்டர்களின் சங்கங்களின் மாநாடுநடக்கவுள்ளது. இந்த மாநாடு வரும் 13ம் தேதி நடக்கிறது.
இந்த மாநாட்டையொட்டி பேரணியும் நடக்கவுள்ளது. மதுரையில் உள்ளதெப்பக்குளத்தில் தொடங்கும் இந்த பேரணி, தமுக்கம் மைதானத்தில் முடிகிறது. இதில்கவுண்டர் இனத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கானவர்கள் கலந்து கொள்வார்கள் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
மாலையில் நடக்கும் பொதுக் கூட்டத்தில், எச்.டி. தேவ கவுடா, எஸ்.வி.பாலசுப்ரமணியம், ஆறுமுக சாமி, கோபால் கவுண்டர் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
இந்த மாநாட்டின்போது கவுண்டர்களுக்கு அரசு அளிக்கும் சலுகைகள், இட ஒதுக்கீடுகோரிக்கை, கவுண்டர் சமுதாயத்திற்கு உதவும் வகையில் பல்வேறு நலத் திட்டங்கள்குறித்து விவாதிக்கப்படும்.












Click it and Unblock the Notifications