மதக் கலவர அபாயத்தில் தென் தமிழகம்

Subscribe to Oneindia Tamil

நெல்லை:

இதுவரை தென்மாவட்டங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த ஜாதிக்கலவரம் சற்று ஓய்துஅமைதி திரும்பிக் கொண்டிருக்கிறது என்று போலீஸார் நிம்மதிப் பெருமூச்சு விட்ட நேரம்.இன்னொரு மதக்கலவரத்திற்கு விதை தூவியிருக்கிறது பாளையங்கோட்டை மசூதிசம்பவம்.

பாளையங்கோட்டை கே.டி.சி நகர் பகுதியில் உள்ள கிரஸண்ட் நகர் மஜீத்மரியம் அல்பீல்மசூதி மீது சனிக்கிழமை இரவு வெடிகுண்டு வீசப்பட்டது. அந்த பகுதியில் தங்கியிருந்தபுளியங்குடியைச்சேர்ந்த டீக்கடைக்காரர் அப்துல் ரஷீத் வெட்டிக் கொல்லப்பட்டார்.

பந்துக்கு அழைப்பு:

அடுத்த நிமிடமே, திருநெல்வேலி, தென்காசி பகுதிகள் ஸ்தம்பித்தன. போக்குவரத்து தடைசெய்யப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் முழு அடைப்பு நடத்த தமிழ்நாடு முஸ்லீம்முன்னேற்றக்கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் முஸ்லீம் அமைப்புகள்அழைப்பு விடுத்தன.

கொலையாளிகளை ஞாயிற்றுக்கிழமை இரவு பத்து மணிக்குள் கைது செய்யாவிட்டால்மேலப்பாளையத்தில் திங்கள்கிழமை முழு அடைப்பு நடத்தப்படும் என்று பல்வேறுஅமைப்புகளின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்திருந்தன. அதன் படி திங்கள்கிழமைநெல்லை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் முழு அடைப்பு நடத்தப்பட்டது.

பள்ளிகள் விடுமுறை:

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மேலப்பாளையத்தில் திங்கள்கிழமை காலையில்இருந்தே எல்லாக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. பள்ளிக் கூடங்களுக்கு விடுமுறைவிடப்பட்டது.

அங்கு பஸ், ஆட்டோ எதும் ஓடவில்லை. நெல்லை ஜங்ஷனில் இருந்துமேலப்பாளையத்திற்கு செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டன. பாளையங்கோட்டையிலும் சிலஇடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. தென்காசிப் பகுதிகளிலும் முழுமையாககடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

கடையநல்லூர், ஏர்வாடி, புளியங்குடி, பேட்டை, ஆகிய ஊர்களிலும் கணிசமான அளவுக்குகடைகள் மூடப்பட்டிருந்தன. அசம்பாவிதம் ஏதேனும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகமுழு அடைப்பு நடத்தப்பட்ட ஊர்களில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கலவரம் மூளும் அபாயப் பகுதிகளில் அதிரடிப்படைபோலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.தாழையூத்து பகுதியில் திங்கள்கிழமை காலை சிலர் ரோடுகளில் தடை ஏற்படுத்தி சாலைமறியல் செய்ய முயன்றனர். போலீஸார் உடனே விரைந்து சென்று அவர்களைகலைத்தனர்.

ரோட்டில் ஏற்படுத்தப்பட்டிருந்த தடைகளும் நீக்கப்பட்டன. மற்றபடி மாவட்டத்தில்எந்தவித அசம்பாவித சம்பவம் நடக்கவில்லை.

அப்துல் ரஷீத் உடல் அடக்கம்:

படுகொலை செய்யப்பட்ட அப்துல் ரஷீத்தின் உடல் ஞாயிற்றுக்கிழமை மாலைபுளியங்குடிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்குள்ள கீழ்ப்பள்ளிவாசல் அருகேயுள்ளமைதானத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

அப்துல் ரஷீத் கொல்லப்பட்டதற்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் நெல்லைமாவட்டத்தின் பல பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை மாலை அமைதி ஊர்வலம் நடந்தது.இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

அப்துல் ரஷீத்தை கொன்றவர்களை பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.தனிப்பட்ட பகை காரணமாக இந்தக் கொலை நடந்ததா என்று தனிப்படை போலீஸார்விசாரணை நடத்தி வருகின்றனர். தென் மண்டல காவல்துறைத்தலைவர் விபாகர் சர்மாஞாயிற்றுக்கிழமை நெல்லை விரைந்தார்.

சாலை மறியல்:

இந்த நிலையில் திங்கள்கிழமை காலை பேட்டையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் திரண்டுவந்து பஸ் மறியலில் ஈடுபட்டனர். தகவல் கிடைத்ததும் பறந்து வந்த போலீஸார்.கூட்டத்தினரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

பேட்டையில் உள்ள ஒரு தியேட்டர் அருகே வந்த அரசு பஸ் மீது ஒரு கும்பல் கல்வீசித்தாக்கியது. இதில் பஸ்ஸின் கண்ணாடிகள் நொறுக்கப்பட்டது.

பாளையங்கோட்டை பெருமாள்புரத்திலும் பஸ்மீது தாக்குதல் நடந்தது. தொடர்ந்து,பயப்போர்வை போர்த்தியபடியே இருக்கிறது நெல்லை மாவட்டம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+