சென்னை ரயிலில் மயக்க மருந்து கும்பல் கைவரிசை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை - ஹவுரா ரயிலில் பயணம் செய்த இருவருக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு அவர்களது பணம், பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை சென்னையிலிருந்து, ஹவுராவுக்குச் செல்லும் ரயில் சென்னை சென்ட்ரல் நிலையத்திற்கு வந்த பின்னும் அதில் பயணம் செய்த இருவர்மயக்கமாக இருந்தனர். இது பற்றி பயணி ஒருவர் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

ரயில்வே போலீஸார் சோதனை:

ரயில்வே போலீசார் ரயில் பெட்டிகளை சோதனை செய்த போது மயங்கிக் கிடந்த பயணிகளில் ஒருவர் பிளாட்பாரத்திலும் மற்றொருவர் கல்கத்தாசெல்லும் கோரமாண்டல் ரயிலிலும் மயக்கமாக இருந்தது தெரிய வந்தது.

அவர்கள் இருவரும் சென்னை பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் 45 வயது மதிக்கத்தக்கவராகவும்,மற்றொருவர் 35 வயது மதிக்கத்தக்கவராகவும் இருந்தனர். இருவரும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்வர்கள் போல் தோன்றுகின்றனர்.

இவர்கள் இருவர்களிடமுள்ள பணம், பொருளை கொள்ளையடிக்க மயக்க மருந்து தடவிய பிஸ்கெட் கொடுத்திருக்கப்படலாம் என போலீசார்சந்தேகிக்கின்றனர். ஹவுரா ரயிலில் பயணம் செய்தவர் எவ்வாறு கல்கத்தா செல்லும் ரயிலில் மயக்கமாக இருந்தார் என போலீசார் விசாரித்துவருகின்றனர்.

மயக்கமாக இருந்த இரு பயணிகளுக்கும் ஞாயிற்றுக்கிழமை மாலை சுயநினைவு வந்தது. அவர்களிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+