திராவிடக் கட்சிகள் ஆட்சியில் சீரழிந்தது தமிழகம்: சிதம்பரம்
நாகர்கோவில்:
தமிழ்நாட்டில் மீண்டும் காமராஜர் ஆட்சி என்ற 33 ஆண்டு கால கனவை நனவாக்க தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிமுழு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று ப.சிதம்பரம் வலியுறுத்தினார்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை அடுத்த கருங்கல் என்னுமிடத்தில், த.மா.கா.வின் மூத்த தலைவரும்,முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் பேசினார்.
1991-ம் வருடம் அ.தி.மு.க ஆட்சிக்கு வரவும், 1996-ம் வருடம் தி.மு.க ஆட்சியமைக்கவும் மூப்பனார்தான்காரணம் என்பதை உணர்ந்து பொறுப்புடன் செயலாற்றினால் அந்த இலக்கை நாம் அடைமுடியும் என்று பேசினார்சிதம்பரம்.
கடந்த முப்பது ஆண்டுகளில் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் எந்த வளர்ச்சியையும் பெறவில்லை.தமிழ்நாட்டில் நெல் உற்பத்தி மிகவும் குறைந்து விட்டது. ஆனால் பஞ்சாப் , ஹரியானா மாநிலங்களில் உற்பத்திமிகவும் அதிகரித்துள்ளது. விவசாய வளர்ச்சி பெறாத எந்த மாநிலமும் முன்னேற முடியாது.
காமராஜரின் ஆட்சிக்காலத்தில் விவசாயத்துக்கும் அது தொடர்பான பாசனத்திற்கும், மின்சார உற்பத்திக்கும்முன்னுரிமை அளிக்கப்பட்டது. ஆனால் கடந்த பத்தாண்டுகளில் மின்சார உற்பத்தி 500 மெகாவாட் என்றஅளவிற்கே அதிகரித்துள்ளது.
தேவைக்கேற்ப மின்சார உற்பத்தி இல்லாததால், தொழிற்சாலைகள் மின்சாரத்திற்கு ஜெனரேட்டர்களை நம்பியிருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அண்மையில் டீஸல் விலை உயர்ந்ததன் காரணமாக தொழிற்சாலைகள் மேலும்பாதிக்கப்பட்டுள்ளன.
அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் சுடுகாடு கூரை வேய்வதில் ஊழல் நடந்தது என்றால் தற்பொழுது கொப்பரைத்தேங்காயில் ஊழல். எனவே திராவிடக் கட்சிகளின் ஆட்சிக் காலத்தில் மக்கள் வாழ்வின் தரம் உயரவில்லை.
மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்காக மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி வந்தோம். ஆனால் பலன் எதும்ஏற்படவில்லை. எனவே த.மா.கா ஆட்சிக்கு வந்தாலோழிய மக்களுக்கு எந்த பயனும் கிட்டப்போவதில்லை.
மக்கள் நலனில் எப்பொழுதும் அக்கறை கொண்டுள்ள ஒரே கட்சி த.மா.காதான். மாநிலத்தில் தூய்மையானஅரசியலையும் , ஆட்சியையும் கொடுக்க த.மாகா முயலும். அது மட்டுமன்றி த.மா.காவின் ஆதரவு இல்லாமல்தமிழகத்தில் எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க முடியாது. இவ்வாறு சிதம்பரம் பேசினார்.


Click it and Unblock the Notifications
