அம்பயரிடம் முறைகேடு: கங்குலிக்கு நோட்டீஸ்
கான்பூர்:
கான்பூரில் நடந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் போது அம்பயரிடம் முறைகேடாக நடந்த கங்குலிக்கும், விக்கெட் கீப்பர் தாஹியாவுக்கும் நோட்டீஸ்வழங்கப்பட்டிருக்கிறது.
கான்பூரில் இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையோ நான்காவது ஒரு நாள் போட்டி கான்பூரில் திங்கள் கிழமை நடந்தது. இதில் வெற்றி பெற்றுஇந்தியா கோப்பையை வென்றது.
இந்த போட்டியின் போது அம்பயர்களின் முடிவுகள் இந்திய வீரர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை.
போட்டியின் ஆரம்பத்தில் வெங்கடேஷ் பிரசாத் வீசிய பந்து மாடன்டோவின் பேட்டில் பந்து பட்டு விக்கெட் கீப்பர் தாஹியாவால் பிடிக்கப்பட்டது. ஆனால்அதற்கு அம்பயர் அவுட் கொடுக்க மறுத்துவிட்டார்.
இதே போல் கங்குலி பந்து வீசிய போது பல முறை எல்.பி.டபிள்யூ அவுட் கேட்ட போது அம்பயர்கள் அவுட் கொடுக்கவில்லை. இதனால் கங்குலி தன்அதிருப்தியை வெளிப்படுத்தினார். கீப்பர் தாஹியாவும் தன் அதிருப்தியை வெளிப்படுத்தினார். அப்போதே அம்பயர் சாத்தே இவர்கள் இருவரையும் எச்சரித்தார்.
இந்தியா பேட் செய்த போது கங்குலி அவுட் கொடுக்காத அம்பயரை எதிர்த்து ஜிம்பாப்வேயின் பந்து வீச்சாளர் ஸ்ட்ராங் அதிருப்தி தெரிவித்தார்.
மேலும் கங்குலி ரன் எடுக்க ஓடிய போது ஸ்ட்ராங் கங்குலியை திட்டினார். அதற்கு பதிலுக்கு கங்குலி அவரை திட்டினார்.
போட்டி முடிந்த பின் கங்குலிக்கும், தாஹியாவுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications