ஜெயாவுக்காக ரத்த ஓவியம், இது ஹூசைனி ஸ்டைல்
சென்னை:
நான் வரைந்த ஒவியங்களை என்னிடம் ஒப்படைக்காவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்றுஅறிவித்திருக்கிறார் கராத்தே வீரர் ஹூசைனி.
புதுமைகளை செய்து காட்டி பெயர் பெற வேண்டும் என்கிற ஆசையில் கராத்தே வீரர் ஹூசைனி எதையாவதுசெய்வார். புதுமை என்கிற பெயரில் அடிக்கடி சர்ச்சையிலும் சிக்கிக் கொள்வார்.
வருகின்ற 18-ம் தேதி சென்னையில் ஒவியக் கண்காட்சி நடத்தத் திட்டமிட்டிருந்தார். அதற்கான போஸ்டர்கள்சென்னையில் ஒட்டப்பட்டிருந்தது. அந்த போஸ்டர்கள் முறையான அனுமதியில்லாமல் ஒட்டப்பட்டிருந்ததாகக்கூறப்படுகிறது. இதைத் தொடந்து போலீசார் ஹூசைனியின் அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.
அங்கே நிர்வாண ஓவியங்கள் பலவற்றை போலீஸார் கைப்பற்றினர். ஹூசைனியின் அலுவலகத்தில் இருந்தஊழியர்கள் ஐந்து பேரையும் கைது செய்து உடனே விடுதலையும் செய்து விட்டனர்.
ஹூசைனி அறிக்கை:
இந்த நிலையில், ஹூசைனி வெளியிட்டுள்ள அறிக்கையில், லலித் கலா அகாடமியில் வரும் 18-ம் தேதி முதல்23-ம் தேதி வரை அதர் ஹேண்ட் என்கிற தலைப்பில் நான் ஓவியக் கண்காட்சி நடத்த இருந்தேன்.
ஆனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு என் வீட்டிற்கு வந்த போலீஸார் என்னுடையஓவியங்களை எடுத்துச் சென்று விட்டனர். போலீஸார் எடுத்துச் சென்ற ஓவியங்கள் மொத்தம் 144.
என் ஓவியங்களை போலீஸார் பறிமுதல் செய்யப்பட்டதற்கு அரசியல் பின்னணியும் காரணம்.
ஓவியக் கண்காட்சி வைப்பதற்கு போலீஸ் அனுமதி வாங்க வேண்டும் என்று கூறுகின்றனர். இதுவரை லலித் கலாஅகாடமியில் எந்த ஒவியரும் போலீஸ் அனுமதி பெற்று வைத்தது கிடையாது.
ஜெ.வுக்காக ரத்தத்தால் ஓவியம்:
போலீஸார் பறிமுதல் செய்த ஓவியங்களில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை நான் ரத்தத்தால் வரைந்தஒவியமும் ஒன்று.
நான் வரைந்த விலை மதிப்பில்லாத ஓவியங்களை என்னிடம் ஒப்படைக்கா விட்டால், செவ்வாய்கிழமை முதல்சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன். இவ்வாறு உசைனி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications