ரகசியம்... பரம ரகசியம்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு:

வீரப்பன் நடமாட்டம் குறித்த உளவுப் பிரிவின் தகவல்கள் பரம ரகசியமாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

வீரப்பன் நடமாட்டம் குறித்த தகவல்களை உளவுப் பிரிவு கவனமுடன் சேகரித்து வருவதாகவும், வீரப்பன் நடமாட்டத்தைதொடர்ந்து உளவுப் பிரிவு கண்காணித்து வருகிறது எனவும் போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த தகவல்கள் அனைத்தும் பரம ரகசியமாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. நடமாட்டம் குறித்த தகவல்களின்அடிப்படையில் தான் அதிரடிப்படையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

அதிரடிப் படையினர் நீலகிரி, சத்தியமங்கலம், பண்ணாரி வனப் பகுதியில் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். வீரப்பன்வேறு இடங்களுக்குத் தப்பிச் செல்லாமல் தடுக்கவும் இவர்கள் வனப் பகுதிகளை சுற்றி வளைத்து கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

காடுகளில் பல இடங்களில் பரண்கள் அமைக்கவும் அதிரடிப்படையினர் தீர்மானித்துள்ளனர்.

கடந்த பல முறை தோல்வியைச் சந்தித்த அதிரடிப் படையினர் இம்முறை, தேவையான உணவுப் பொருட்களை எடுத்துச்செல்கின்றனர்.

அதேசமயம் குறிப்பிட்ட இலக்கு வரை சென்று திரும்பி வராமல் பயணத்தை தொடர்கின்றனர். இரவு பகல் என்றில்லாமல்தொடர்ந்து முன்னேறி வருகின்றனர். தங்களுக்குத் தேவையான பொருட்களை அவர்களே எடுத்துச் செல்கின்றனர்.

வீரப்பனைச் சந்திக்க அவரது மனைவியோ, அல்லது உறவினர்களோ செல்லக் கூடும் எனக் கருதி, அவர்களையும்அதிரடிப்படையினர் கண்காணித்து வருகின்றனர். அதேசமயம், வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியும் அவரது இருப்பிடத்தைமாற்றிக் கொண்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+