டான்சி: ஜெயா விடுதலையை எதிர்த்து மேல் முறையீடு
சென்னை:
டான்சி வழக்கில் அரசு சொத்தை, அரசு ஊழியர் வாங்குவதற்கு தடை விதிக்கும் இந்தியச் சட்டப்பிரிவிலிருந்துஜெயலலிதாவையும், சசிகலாவையும் விடுதலை செய்ததை எதிர்த்து சி.பி.சி.ஐ.டி போலீசார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.
டான்சி நிலத்தை ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்திற்காக குறிப்பிட்ட மதிப்பீட்டை காட்டிலும் குறைவாக வாங்கிஇழப்பு ஏற்படுத்தியதற்காக ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா முன்னாள் டான்சி நிர்வாக இயக்குநர் சீனிவாசன் உள்ளிட்ட 6 பேருக்கும் 3ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தனி நீதிமன்ற நீதிபதி அன்பழகன் தீர்ப்பளித்தார்.
சசி என்டர்பிரைசஸ் நிறுவனத்திற்காக டான்சி வாங்கியது தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் முகமதுஆசிப் தவிர மற்ற 5 பேருக்கும் 2 ஆண்டு கடுங்காவல் தண்டைனையும் வழங்கப்பட்டது.
இந்த இரண்டு வழக்குகளிலும் இந்திய தண்டனைச் சட்டம் 169-வது (அரசு ஊழியர் அரசு சொத்தை வாங்குவதற்குதடை) பிரிவின் கீழ் இருந்த குற்றச்சாட்டிலிருந்து ஜெயலலிதாவும், இந்திய தண்டனைச் சட்டம் 109-ன் கீழ்(குற்றத்திற்கு உடந்தையாக இருத்தல்) சசிகலாவும், வழக்கில் தொடர்புடைய இன்னொருவர் சீனிவாசனும்விடுவிக்கப்பட்டனர்.
சிபிசிஐடி மேல்முறையீடு:
இந்த வழக்கில் முக்கியமான சட்டப்பிரிவிலிருந்து இவர்களை விடுவித்ததை எதிர்த்து சிபி.சி.ஐ.டி. போலீசார்சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்துள்ளனர்.
அவர்கள் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:
டான்சி வழக்கில் இந்திய தண்டனைச் சட்டம் 409-வது பிரிவின் கீழ் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதா 169 பிரிவின்கீழும் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த சட்டப்பிரிவின் கீழ் ஜெயலலிதாவை விடுவித்ததற்கு நீதிபதி கூறியகாரணங்கள் வலுவில்லாததாக இருக்கிறது.
அரசு சொத்தை ஜெயலலிதா வாங்கியதற்கு மற்றவர்கள் உடந்தையாக இருந்திருக்கிறார்கள். அரசு ஊழியர்கள்அரசு சொத்தை வாங்குவதற்கு தடை விதிக்கும் 169-வது சட்டப்பிரிவு இந்த வழக்குக்கு பொருந்தும். இதைநீதிமன்றம் கவனிக்கவில்லை.
எனவே 169 பிரிவின் கீழ் ஜெயலலிதாவை விடுதலை செய்ததும், குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததற்காக 109பிரிவின் கீழ் சசிகலாவையும், சீனிவாசனையும் விடுவித்தது செல்லாது என அறிவிக்கப்பட வேண்டும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications