சி.பி.ஐ. அதிகாரிகளுடன் ஐ.சி.சி. அதிகாரிகள் ஆலோசனை
டெல்லி:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஊழல் தடுப்புக் குழுவினர் டெல்லியில் சி.பி.ஐ.அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினர்.
கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. இதில்வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கும் தொடர்பு இருப்பதாக சி.பி.ஐ. கூறியிருந்தது.
இதுகுறித்து விசாரணை நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஊழல் தடுப்பு பிரிவின்தலைவர் பால் காண்டன் தலைமையிலான குழு இந்தியா வந்துள்ளது.
இக்குழுவினர், வெளிநாட்டு வீரர்களுக்கு கிரிக்கெட் சூதாட்டத்தில் உள்ள தொடர்புகுறித்து கிரிக்கெட் வாரியத் தலைவர் முத்தையா மற்றும் கிரிக்கெட் வாரியத்தின் ஊழல்தடுப்பு கமிஷனர் மாதவனிடமும் ஆலோசனை செய்தனர்.
சி.பி.ஐ. அதிகாரிகளை இந்த குழுவினர் செவ்வாய்கிழமை சந்தித்தனர்.
நான்கு பேர் கொண்ட இந்த குழுவினர் சி.பி.ஐ. இணை இயக்குநர் சவானி மற்றும் உயர்அதிகாரிகளிடம் வெளிநாட்டு வீரர்களுக்கு கிரிக்கெட் சூதாட்டத்தில் இருக்கும்தொடர்பு குறித்து கேட்டு தெரிந்து கொண்டனர். அதற்கான ஆதாரங்களையும் இவர்கள்சேகரித்தனர்.
ஆஸ்திரேலிய வீரர்கள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரித்து வரும் ஆலன் பீக்காக்கும்இந்த குழுவில் இடம் பெற்றிருந்தார்.
பால்காண்டன், தான் நடத்திய ஆலோசனை பற்றி கூறுகையில், சி.பி.ஐ. அதிகாரத்திற்குஉட்படாத பகுதிகளில், சம்பந்தப்பட்ட வீரர்களின் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்துவிசாரணை நடத்துவதற்கும், இது தொடர்பான ஆதாரங்கள் திரட்டவதுதான் எங்கள்பயணத்தின் நோக்கம் என கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications