ஸ்ரீநகரில் அமைச்சரைக் கொல்ல முயற்சி
ஸ்ரீநகர்:
காஷ்மீரின் தெற்குப் பகுதியான அர்வானி கிராமத்தில் அமைச்சர் அலி முகமது சாகரைக் குறி வைத்துத்தீவிரவாதிகள் கிரானைடு வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தியதில் 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.இவர்களில் 5 பேர் போலீஸ்காரர்கள்.
இந்தத் தாக்குதலில் அமைச்சர் காயம் ஏதுமின்றி உயிர் தப்பினார். தலைநகர் ஸ்ரீநகரிலிருந்து 50 கிலோமீட்டர்தொலைவிலுள்ள அர்வானி கிரமாத்தில் உள்ள தனது வீட்டு வாசலில் குண்டு துளைக்காத காரில் அமைச்சர் ஏறியஅடுத்த சில நொடிகளில் கிரானைட் வெடிகுண்டு வெடித்தது.
இதில், சாகருடன் சென்றிருந்த கிராம மக்கள் சிலரும், போலீஸ்காரர்கள் சிலரும் காயமடைந்தனர். இச்சம்பவத்தில்மொத்தம் 20 பேர் காயமடைந்தனர். அவர்களில் 7 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
முஸ்லீம்களின் புனித மாதமான ரம்ஜான் மாதத்தில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின் ஒரு அமைச்சரைக் குறிவைத்து நடக்கும் முதல் தாக்குதலாகும் இது. சாகர் ஒரு மேம்பாலத்தைத் திறந்து வைப்பதற்காக தனது ஊருக்குச்சென்றிருந்தார்.
உதம்பூர் மாவட்டம் கூல் குலாப்கார் கிராமத்தில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம் ஒன்றில் 3 பேர் காயமடைந்தனர்.
இதற்கிடையே, ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் அமானுல்லா கானின் மகளின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக பாகிஸ்தான் சென்றிருந்த அகில இந்திய ஹூரியத் அமைப்புத் தலைவர் அப்துல் கானி ஸ்ரீநகர்திரும்பியுள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications