துபாயில் இந்திய வர்த்தகக் கண்காட்சி

Subscribe to Oneindia Tamil

துபாய்:

துபாய் உலக வர்த்தக மைய வளாகத்தில் பிப்ரவரி 14ம் தேதி முதல் 18-ம் தேதி வரைஇந்திய வர்த்தகக் கண்காட்சி "இன்ட்எக்ஸ்போ நடைபெறவுள்ளது.

மொத்தம் 130 நிறுவனங்கள் இந்த வர்த்தகக் கண்காட்சியில் பங்கேற்க இதுவரைஒப்புதல் கொடுத்துள்ளன. இந்திய தகவல் தொழில்நுட்பத்திற்கு இந்தக் கண்காட்சியில்முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

நான்கு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இந்திய வர்த்தகக் கண்காட்சி, ஐக்கிய அரபுஎமிரேட்டில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. கடைசியாக 1996-ம் ஆண்டு நடந்தது.அப்போது ரூ. 4 பில்லியன் அளவுக்கு வர்த்தகம் நடந்தது. இந்திய வர்த்தகமேம்பாட்டுக் கழகம் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

கண்காட்சியின்போது இரண்டு கருத்தரங்குகளும் நடைபெறவுள்ளன. ஐக்கிய அரபுஎமிரேட் மற்றும் இந்தியாவுக்கு இடையிலான வர்த்தகத்தை அதிகப்படுத்தும் விதத்தில்கண்காட்சி அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீப காலமாக இரு நாடுகளுக்கும் இடையே, வர்த்தக அளவு குறிப்பிடத்தக்க அளவில்அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டில் வர்த்தக அளவு 16 சதவீதம் அதிகரித்துள்ளது.இது இந்தியாவிலிருந்து நடந்த ஏற்றுமதி மூலம் கிடைத்தது. அதேபோல, ஐக்கிய அரபுஎமிரேட்டிலிருந்து மேற்கொள்ளப்படும் ஏற்றுமதி அளவு 30 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+