அகர்கர் அதிரடி .. தொடரை வென்றது இந்தியா

Subscribe to Oneindia Tamil

ராஜ்காட்:

இந்திய -ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 5வது இறுதி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், அஜீத்அகர்கரின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா அபார வெற்றி பெற்றது. ஒரு நாள் தொடரையும் வென்றது.

இந்திய- ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே 2 டெஸ்ட் போட்டிகளும், 5 ஒரு நாள் போட்டிகளும் நடைபெற்றன.டெஸ்ட் போட்டியை1-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது.

ஒரு நாள் போட்டித் தொடரை நான்காவது ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற்ற போதே 3-1 என்ற கணக்கில்இந்தியா வென்று விட்டது. இந்நிலையில் 5-வது ஒரு நாள் போட்டி ராஜ்காட்டில் இருக்கும் முனிசிபல்ஸ்டேடியத்தில் வியாழக்கிழமை நடந்தது. இந்த போட்டியில் இந்தியா 39 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இதன் மூலம் இந்தியா 4-1 என்ற புள்ளிக் கணக்கில் வென்று பெப்சி கோப்பையை பெற்றது. டாஸ் வென்றஜிம்பாப்வே முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதனால் இந்தியா முதலில் பேட் செய்ய களமிறங்கியது.

இந்திய கேப்டன் கங்குலி, அம்பயர்களிடம் முறை கேடாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டு ஒருபோட்டியில் விளையாடக்கூடாது என தடை விதிக்கப்பட்டிருந்ததால் இந்த போட்டியில் விளையாடவில்லை.அவருக்கு பதிலாக உதவி கேப்டனாக இருந்த ராகுல் டிராவிட் தலைமை பொறுப்பை ஏற்றார்.

துவக்க ஆட்டக்காரர்களாக டெண்டுல்கரும் ஸ்ரீராமும் களமிறங்கினர். இந்திய அணி துவக்கம் முதலேவிக்கெட்டுகளை இழந்து வந்தது. ஒரு நிலையில் இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்து 114 ரன்கள் மட்டுமே எடுத்துபலவீனமாக இருந்தது.

அப்போது பாதானியுடன் ஜோடி சேர்ந்தார் சோதி. இந்த ஜோடி 112 ரன்கள் சேர்ந்தனர். 77 ரன்கள் எடுத்திருந்தநிலையில் பதானி ஆட்டமிழந்தார். பதானி 99 பந்துகளில்77 ரன்கள் எடுத்தார்.

சோதியுடன் ஜோடி சேர்ந்தார் அஜீத் அகர்கர். ஆஸ்திரிரேலியாவில் தனது அதிரடி ஆட்டத்தால் அனைவரையும்கவர்ந்தவர் அகர்கர், சமீப காலமாக அவர் சிறப்பாக ஆடவில்லை.

இந்த ஆட்டத்தில் அவர் மிகச் சிறப்பாக ஆடினார். 25 பந்துகளில் 67 ரன்கள் குவித்தார். இதில் 7 பவுன்டரிகளும் 4சிக்சர்களும் அடித்தார். இவர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதக்கது. இந்தியவீரர்களிலேயே குறைந்த பந்துகளில் 50 ரன்களை எடுத்தவர் என்ற பெயரையும் பெற்றார் அகர்கர்.

சோதியும் ஆட்டமிழக்காமல் 53 ரன்கள் எடுத்தார்.

ஜிம்பாப்வே தரப்பில் ஸ்டீரிக் 10 ஓவர்களில் 45 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை எடுத்தார். ஸ்ட்ராங் 10ஓவர்களில் 61 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றினார். மர்பி 10 ஓவர்களில் 63 ரன்கள் கொடுத்து 3விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதன் பின் 307 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ஜிம்பாப்வே களமிறங்கியது. ஆனால் துவக்கம் முதலேஅவர்களுக்கு விக்கெட்டுகள் சரிந்து கொண்டே இருந்தது. ஜிம்பாப்வே தரப்பில் மோர்னாடா 71 ரன்கள் எடுத்தார்.வேறு எவரும் குறிப்பிடத்தக்க அளவில் ரன்கள் குவிக்கவில்லை.

இதனால் ஜிம்பாப்வே 47.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 262 ரன்கள் எடுத்து தோல்வியைதழுவியது.

இதன் மூலம் இந்தியா 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியத் தரப்பில் பிரசாத் 1 விக்கெட்டையும், சோதி 2 விக்கெட்டுகளையும், அகர்கர் 3 விக்கெட்டுகளையும்,ஸ்ரீராம் 2 விக்கெட்டுகளையும். ஷேவாக் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

மேன் ஆப் தி மேட்ச்சாக அகர்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர் நாயகனாக கங்குலி தேர்வானார். தொடரின்சிறந்தவீரருக்கான சிறப்பு விருதும் அகர்கருக்கு வழங்கப்பட்டது.

இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 4-1 என்ற புள்ளிக்கணக்கில் இந்தியா பெப்சி கோப்பையைகைப்பற்றியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+