அயோத்தி குழப்பம் தொடர்கிறது .. ராஜ்யசபை ஒத்திவைப்பு
டெல்லி:
அயோத்தி பிரச்சினை காரணமாக ஏற்பட்ட கூச்சல், குழப்பத்தால் ராஜ்யசபை மீண்டும்ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த சில நாட்களாக அயோத்தி பிரச்சினை, நாடாளுமன்றத்தின் இரு சபைகளையும்கலக்கி வருகிறது. லோக் சபையும், ராஜ்ய சபையும் தொடர்ந்து அமளியைச் சந்தித்துவருகின்றன.
வியாழக்கிழமை ராஜ்யசபை கூடியதும், அயோத்தி பிரச்சினை குறித்து விவாதம் நடத்தசபைத் தலைவருக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.வாக்கெடுப்புக்கு விடும் விதத்திலான பிரிவின் கீழ் விவாதம் அமைய வேண்டும்என்றும் அவர்கள் கோரினர். அப்போது பிரதமர் வாஜ்பாய் சபையில் இருந்தார்.
வாஜ்பாய் சபையில் இருந்ததால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதிக அளவில் கூச்சல்எழுப்பினர். அவர்களை எதிர்த்து ஆளுங்கட்சி உறுப்பினர்களும் குரல் எழுப்பினர்.இதனால் சபையில் யார், என்ன பேசுகிறார்கள் என்பதே புரியவில்லை.
இந்த நிலையில், உறுப்பினர்களை அமைதிப்படுத்த முயன்ற சபைத் தலைவர் கிருஷ்ணகாந்த், அது தோல்வி அடைந்ததால், சபையை வியாழக்கிழமை முழுவதும்ஒத்திவைப்பதாகக் கூறி விட்டு வெளியேறினார்.
யு.என்.ஐ.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications