இங்கிலாந்து அமைச்சருக்கு இலங்கை அரசு கண்டனம்
கொழும்பு:
இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் விடுதலைப் புலிகள் சுயநிர்ணயம் கேட்டால் அதற்கு உலக நாடுகள் ஆதரவளிக்கும் என்று இங்கிலாந்துவெளியுறவுத்துறை அமைச்சர் பீட்டர் ஹெய்ன்ஸ் கூறியதற்கு இலங்கை அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து வெளியுறவுத் துறை அமைச்சர் பீட்டர் ஹெய்ன் சமீபத்தில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்ககொண்டார். அப்போது அவர் பேசுகையில்,விடுதலைப் புலிகள் தனி நாடு கேட்டால் அதற்கு ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா ஆகியவை ஆதரவு தராது. மாறாக, யாருக்கும் பாதிப்பு ஏற்படாதவகையில், வடக்கு யாழ்ப்பாணத்தில் சுயநிர்ணயம் கேட்டால் அதற்கு கண்டிப்பாக சர்வதேச நாடுகள் ஒத்துழைப்பு நல்கும் என்று கூறியிருந்தார். இதற்குஇலங்கை கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் கூறியதாவது:
இலங்கையில் கடந்த 17 ஆண்டுகளாக விடுதலைப் புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது. இதில் ஆயிரக்கணக்கானோர்பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் வடக்கு யாழ்ப்பாணம் பகுதியில் புலிகள் சுயநிர்ணயம் கேட்டால் அதற்கு சர்வதேச நாடுகள் ஆதரவு தெரிவிக்கும் என்று இங்கிலாந்துஅமைச்சர் ஹெயின் கூறியிருக்கிறார். அவர் இப்படிக் கூறியதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இது போன்ற அறிக்கைகளை இலங்கை ஒருபோதும் ஊக்குவிக்காது. விரும்பவும் செய்யாது.
உதாரணமாக இந்தியாவில் எந்த ஒரு மாநிலமும் சுய நிர்ணயம் கேட்கவில்லை. மேலும் அரசியலமைப்புச் சட்டம் என்று ஒன்று இருப்பதை நாம்ஒருபோதும் மறந்து விடக்கூடாது என்றார்.
இதற்கிடையே, இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண சமரச முயற்சியில் ஈடுபடுகிறோம் என்ற பெயரில் இனப்பிரச்சனைக்கான தீர்வைகேலிக்கூத்தாக்கும் முயற்சியில் நார்வே தூதுக்குழுவினர் ஈடுபட்டுள்ளார்கள் என்று கூறி 100 க்கும் மேற்பட்ட ஜனதா விமுக்தி பெருமுனா கட்சியினர்புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது, ஜனதா விமுக்தி பெருமூனா பொதுச்செயலாளர் டில்வின் சில்வா கூறுகையில், இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் முயற்சியில்நார்வே தூதுக்குழுவினர் நேர்மையாகச் செயல்படவில்லை.
இலங்கையில் பலமுறை விடுதலைப்புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சூழ்நிலைகள் ஏற்பட்டும் அவை அனைத்தும் படுதோல்வியையே அடைந்துள்ளன. அது ஒரு கசப்பான அனுபவம். இது இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்கும் தெரிந்த விஷயம்.
மேலும் தனி ஈழம் கேட்டுப் போராடி வரும் விடுதலைப்புலிகள் அமைப்பு உலக அளவில் மிகவும் அபாயகரமான தீவிரவாத அமைப்பாகும்.அவர்கள் ராக்கெட் மற்றும் ஆர்ட்டிலரி வெடிகுண்டுகள் வீசித் தாக்குதல் நடத்தும் அளவுக்கு வலிமையானவர்கள் என்றார் அவர்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications