செங்கோட்டையன் ஊழல் வழக்கில் இன்று தீர்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் மீதான போக்குவரத்துக் கழக ஊழல் வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்படுகிறது.

இந்த வழக்கில் 2 வது தனிநீதிபதி எஸ்.எஸ்.பி.தார்வேஸ் தீர்ப்பளிக்கிறார். இவர் தனி நீதிபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்டபின் வழங்கும் முதல் தீர்ப்புஇது.

அண்ணா போக்குவரத்துக் கழகத்திற்குத் தேவையான உதிரிபாகங்கள், பஸ் கட்டுமானம், டிக்கெட் அச்சடித்தல் போன்றவற்றில் 75.42 லட்ச ரூபாய்ஊழல் புரிந்ததாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மீது வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கில் செங்கோட்டையனுக்கு உடந்தையாக இருந்த அவரது உதவியாளர் எழில், கோபி நடராஜன் ஆகியோர் மீது சிபிசிஐடி போலீஸார் வழக்குத்தொடர்ந்தனர்.

இவ்வழக்கு 2 வது தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்குத் தொடர்பாக கடந்த 97 ம் வருடம் ஜூலை மாதம் குற்றப்பத்திரிக்கைதாக்கல் செய்யப்பட்டது.

குற்றச்சாட்டுக்கள் பதிவு:

1998 ம் வருடம், மார்ச் மாதம் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து அதே வருடம் டிசம்பர் மாதம் முதல் சாட்சிகள் மீதானவிசாரணை நடந்து வருகின்றது. அரசுத் தரப்பில் மொத்தம் 66 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.

செங்கோட்டையன் தரப்பில் 2 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இரு தரப்பு சாட்சிகளின் விசாரணை முடிந்தது. பின்னர் இவ்வழக்கில் வக்கீல்கள் விவாதமும்முடிவடைந்தது.

இருதரப்பு விவாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி எஸ்.எஸ்.பி.தார்வேஸ் இவ்வழக்கு தொடர்பான தீர்ப்பை வியாழக்கிழமை வழங்குவதாக அறிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+