புஷ்ஷுக்கு வாஜ்பாய் வாழ்த்து
டெல்லி:
ஜார்ஜ் டபிள்யூ. புஷ் ஜூனியர் தலைமையிலான அமெரிக்காவுடன், இதமான நட்பைஏற்படுத்திக் கொள்ள இந்தியா ஆர்வமுடன் இருப்பதாக பிரதமர் வாஜ்பாய்கூறியுள்ளார்.
அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்கவுள்ள ஜார்ஜ் புஷ்ஷுக்கு அனுப்பியவாழ்த்துச் செய்தியில் வாஜ்பாய் கூறியிருப்பதாவது:
இந்திய, அமெரிக்க உறவில் புதிய பரிமானம் ஏற்படும் என்று இந்தியா நம்புகிறது.இதுவரை இருந்து வரும் நட்புடன், இதமான, அழுத்தமான நட்பு தொடர்ந்து நீடிக்கும்என்று நாங்கள் விரும்புகிறோம்.
அடுத்த அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உங்களுக்கு எனதுஇதயப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். புதிய மில்லனியத்தில்அமெரிக்காவை தலைமைப் பொறுப்பில் நடத்திச் செல்லவுள்ள உங்களுக்கு எனதுவாழ்த்துக்கள். இந்தியாவும், இந்திய மக்களுக்கும் உங்களுக்கு தங்களது ஆதரவைத்தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.
சர்வதேச அமைதி மற்றும் நிலைத் தன்மையை வலுப்படுத்த இரு நாடுகளும் சேர்ந்துசெயல்படும். அதற்காக நான் காத்திருக்கிறேன் என்று தனது வாழ்த்துச் செய்தியில்கூறியிருந்தார் வாஜ்பாய்.
பதவி விலகிச் செல்லும் அதிபர் பில் கிளிண்டன், இந்தியா வந்து சென்ற பின், இந்திய,அமெரிக்க உறவில் புதிய திருப்பம் ஏற்பட்டது. உரசல்கள் நீங்கி, இரு நாடுகளும்மிகவும் நெருங்கிய நட்பை ஏற்படுத்திக் கொண்டன. கிளிண்டன் வருகையையடுத்து,வாஜ்பாய் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன் பிறகு இருநாடுகளும் மிகவும் நெருங்கி விட்டன.
அமெரிக்காவின் இரு பெரும் கட்சிகளில் ஒன்றான, குடியரசுக் கட்சி எப்போதுமே,இந்தியாவுக்கு நெருக்கமாக இருந்ததில்லை. ஜார்ஜ் புஷ்ஷும் குடியரசுக் கட்சியைச்சேர்ந்தவர்தான். எனவே புஷ் ஆட்சிக்காலம் இந்தியாவுக்கு முக்கியமானதாகமாறியுள்ளது என்பதை மறக்க முடியாது.
கிளிண்டன் போட்டுக் கொடுத்த பாதையில் புஷ் நடப்பாரா அல்லது புதிய பாதைஅமைப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications