திருச்சியில் போட்டியிடுவாரா குமாரமங்கலம் தங்கை?
கேள்வி - பதில்
கே: நெடுமாறன் உருவத்தில், டாக்டர் ராதகிருஷ்ணனை பார்கிறாராமே ராஜ்குமார். இதுபற்றி ...?
ப: பாவம், 108 நாள் காட்டில் இருந்திருக்கிறார். கொஞ்சம் பிரமை இருக்காதா?
கே: வீரப்பனின் பின்னணியில் விடுதலைப்புலிகள் உள்ளனர் - என்பதை நீங்களும் நம்புகிறீர்களா?
ப: முழுமையாக நம்பவில்லை. புலிகள் இருப்பது, பின்னணியா, முன்னணியா என்பது பற்றி சந்தேகம் இருக்கிறது.
கே: பாமர ஜனங்கள் முதல், பல்கலைக் கழக பேராசிரியர்கள் வரை கோடீஸ்வரன் / க்ரோர்பதி ஆகும்வெறி முற்றுவதை கவனித்தீர்களா?
ப: ஆசை யாரை விட்டது? யாராவது ஏதாவது நினைப்பார்களே ... ஏதாவது கேள்விக்கு பதில் தெரியாமல்விழித்தால், நமது பவிசு வெளிப்பட்டு விடுமே ... என்பது போன்ற கவலைகள் இல்லாவிட்டால், நான் கூடத்தான்முயற்சி செய்திருப்பேன். இந்த லட்சணத்தில் மற்றவர்களைப் பற்றி பேச எனக்கு அருகதை இல்லை.
கே: 23.11.2000 தினமணி மக்கள் மன்றம் பகுதியில் கடத்தல் வீரப்பனை இனி சமாளிப்பது எப்படி?என்பது குறித்து நூற்றுக்கணக்கான வாசகர்கள் எழுதிய கருத்துக்களில், வீரப்பனுக்கு எதிராக வந்தகருத்துக்களும், வீரப்பனுக்கு ஆதரவாக வந்த கருத்துக்களும் ஏறக்குறைய இணையாக இருந்தன -என்பதிலிருந்து தாங்கள் கூற விரும்புவது ... ?
ப: முதல்வர் மற்றும் அவருடைய தூதர்களின் வீரப்ப ஆதரவுப் பிரச்சாரம் -தினமணி வாசகர்கள் பாதி பேர்களிடம்எடுபட்டிருக்கிறது.
கே: நடிகர் ராஜ்குமாரை விடுவிப்பதற்காக, சந்தன வீரப்பனுக்கு ஒரு பைசா கூட தமிழக - கர்நாடகஅரசுகள் கொடுக்கவில்லை என்று கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவே கூறியிருக்கிறாரே!நம்பலாமா ...?
ப: அவர்கள் கொடுக்கவில்லை என்றால், யாருமே கொடுக்கவில்லை என்று அர்த்தம் அல்ல. யாரோகொடுத்திருந்தால் - அந்த யாரோவிற்கு. அரசு கொடுத்திருக்கலாமே.
கே: நெடுமாறனையும், வீரமணியையும் ஒப்பிட்டு முதல்வர் கருணாநிதி பேசியுள்ள பேச்சு பற்றி தங்கள்கருத்து என்ன?
ப: இருவருமே விடுதலைப் புலி ஆதரவாளர்கள்தானே? என்ற முதல்வரின் கேள்வி, நியாயமானதே. இருவருமேபுலி ஆதரவாளர்கள்தான். ஆனால், நெடுமாறன்தான், அரசு அங்கீகாரம் பெற்ற ஆதரவாளர் - அதனால்தான்பிரச்னை எழுகிறது.
கே: நாத்திகமும், ஆத்திகமும் பணம் பண்ணுவதற்கான பாதைகள் என்கிறீர்கள். சரி. இந்த இரண்டைப்பற்றியும் எழுதி துக்ளக் பணம் பண்ணுகிறது - என்று நாங்கள் சொன்னால் ஒப்புக் கொள்வீர்களா?
ப: ஒப்புக் கொள்வேன். திருடன் பணம் பண்ணுகிறான். அவனைப் பிடிக்கிற போலீஸ்காரரும் சம்பளம்வாங்குகிறாரே? அதுவும் பணம் பண்ணுவதுதானே? என்று கேட்டால் ஒப்புக் கொள்கிற மாதிரி - இதையும் ஒப்புக்கொள்கிறேன்.
கே: அமெரிக்க ஜனாதிபதி தேர்தலிலும் கள்ள ஓட்டுக்கள். வாக்காளர் பெயர் விடுபடுதல், குடும்பஅரசியல் - போன்ற சமாச்சாரங்களும் இடம் பெற்றுள்ளதாக வரும் செய்திகள் குறித்து ... ?
ப: வீட்டுக்கு வீடு வாசற்படி: நாட்டுக்கு நாடு தேர்தல் மோசடி. ஒரு பெரும் கூட்டமாக மக்கள் வாக்களித்து, ஒரு குழுதேர்வு செய்யப்படும் - என்கிற ஜனநாயக தத்துவம் இருக்கும் வரை, இம்மாதிரி விஷயங்கள் நடந்து கொண்டுதான்இருக்கும்.
கூட்டம் சேர்ந்தாலே - அந்த நெரிசலில், அறிவு நசுங்கும் வாய்ப்புகள் நிறையவே உணடு.












Click it and Unblock the Notifications