திருச்சியில் போட்டியிடுவாரா குமாரமங்கலம் தங்கை?
கேள்வி - பதில்
கே: பெட்ரோலியப் பொருட்களின் விலை குறைப்பு, மம்தா பானர்ஜிக்குக் கிடைத்த வெற்றியாகக்கருதலாமா ...?
ப: அவருக்குக் கொடுக்கப்பட்ட காணிக்கையாகவே கூட கருதலாம். ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு,இதனால் கிடைக்கக் கூடிய நிம்மதி தாற்காலிகமானதாகவே முடியும் சாத்தியக் கூறு இருக்கிறது.
மேற்கு வங்கத்தில், காங்கிரசுடன் கூட்டு சேர்ந்தால்தான், மார்க்சிஸ்ட் கூட்டணியைத் தோற்கடிக்க முடியும் - என்றுமம்தா பானர்ஜி தீர்மானித்தால்,அப்போது மதவாதம் பற்றி அவருக்கு கவலை வருமே! அப்போது பா.ஜ.க. என்னசெய்வது?
கே: ராஜ்குமார் விடுதலையின் பின்னணியில் தடாலடியாக குதித்த பெண் டாக்டர் பானுவின் பின்னணிஎன்ன?
ப: இதன் பின்னணியில் இருப்பது - கிரானைட் வியாபாரம் என்று கூறப்படுவதில் உண்மை இருக்கும் என்றுதோன்றுகிறது.
கே: குண்டுமழை பொழிந்து வியட்நாம் நாட்டையே நாசமாக்கிய அமெரிக்க நாட்டை மன்னித்து,அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டனுக்கு சிவப்புக் கம்பள மரியாதை கொடுத்திருக்கும் வியட்நாம் நாடுபற்றி ... ?
ப: பொருளாதார முன்னேற்றம் நோக்கி விரைந்து செல்ல ஒரு நாடு முனையும் போது - உணர்ச்சிகளுக்குஇடமில்லை.
கே: ராமர் கோயில் விவகாரத்தை பா.ஜ.க. கை விடுவது நல்லதா? ஒத்திப் போடுவது நல்லதா?
ப: மறப்பது நல்லது.
கே: பார்த்தீர்களா! பெண்கள் என்றால் இளக்காரமாகப் பேசுவீர்களே! இரு மாநில அரசுகள் மற்றும் சிலமுக்கியப் பிரமுகர்கள் சாதிக்காததை, ஒரு பெண் (பானு) சாதித்து உள்ளாரே...? இப்போதாவது உங்கள்கருத்தில் மாற்றம் உண்டா?
ப: நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? காட்டுக்கு அனுப்பினால்தான் பெண்களின் பெருமை புரியும் - என்கிறீர்களா?
கே: போலி வாக்காளர்கள் இருந்தால், அவர்களை வீரப்பனை தேடுதை விட தீவிரமாகத் தேடிக் கண்டுபிடித்து, தண்டிப்போம் என்று எம்.எஸ்.கில் கூறியிருப்பது குறித்து ...?
ப: அடக்கடவுளே! இவ்வளவுதான் தீவிரமா? போலி வாக்காளர்களை கண்டு பிடித்து கிழித்த மாதிரிதான்!
கே: முதலில் அதிரடிப்படையின் வீரர்களை தண்டிக்க வேண்டும்: பின்புதான் வீரப்பனை தேட வேண்டும்என்று பழ. நெடுமாறன் கூறியுள்ளது பற்றி ... ?
ப: போலீஸ் ஸ்டேஷன்களில் நிறைய பேர் துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள்: அதனால் முதலில் இந்த மாதிரிநிகழ்ச்சிகளில் சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுத்து முடிக்கப்பட வேண்டும்; அதற்குப் பிறகுதான்திருடர்களையும், கிரிமினல்களையும் பிடிப்பதில் போலீஸ் முனைய வேண்டும்; அதுவரை திருட்டு, கொலை,கொள்ளை ஆகியவற்றைப் பற்றி போலீஸ் கண்டு கொள்ளக் கூடாது என்று கூறப்பட்டால், அதை ஏற்பீர்களா?
கே: ரம்ஜான் மாதத்தில், ஜம்மு காஷமீரில் தீவிரவாதிகளுக்கு எதிராக நமது ராணுவம் எடுத்து வரும்நடவடிக்கை, நிறுத்தப்படும் என்ற பிரதமரின் அறிவிப்பு பற்றியும், அதை எதிர்த்து சிவசேனா கட்சிபாராளுமன்றத்தில் வெளிநடப்பு செய்தது பற்றியும் - தங்கள் கருத்து ...?
ப: சிவசேனையின் எதிர்ப்பில் நியாயம் இருக்கிறது - என்று காஷ்மீர் தீவிரவாதிகள் நிரூபிப்பார்கள் என்றுஎதிர்பார்க்கிறேன்.
கே: ஊரை அடித்து உலையில் போடுகிற அரசியல்வாதிகளின் நடுவே, வீரப்பன் உயர்ந்து நிற்கிறான்என்கிறாரே பழ. நெடுமாறன். இதுபற்றி ...?
ப: உண்மைதான். அம்மாதிரியானவர்களிடையே அவன் தன்னிகரற்றவன்தான்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications