பில் கொடுக்க மறந்த பில்
லண்டன்:
அமெரிக்க அதிபர் பில் கிளின்டன், லண்டனில் உள்ள நோட்டிங் ஹில் என்ற இடத்தில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் தனது குடும்பத்துடன் சாப்பிட்டு விட்டுசாப்பிட்டதற்கான பணம் கொடுக்காமல் சென்று விட்டார் என்று இங்கிலாந்தில் உள்ள பத்திரிக்கையில் செய்தி வெளியாகியுள்ளது.
ஐரோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கிளிண்டன் தற்போது லண்டனில் உள்ளார். நாட்டிங் ஹில் பகுதியில் உள்ள பாருக்கு கிளின்டன், மனைவி ஹிலாரி,மகள் செல்சியா ஆகியோர் சென்றனர். அங்கு கஜூர் ஷ்ரிம்ப் என்ற சான்ட்விட்ச்சை கிளிண்டன் குடும்பத்தினர் சுவை பார்த்தனர். மொத்தம் 20 நிமிடங்கள்அங்கு அவர்கள் இருந்தனர்.
சாப்பிட்டு முடிந்ததும், மூவரும் பில் பணம் கொடுக்காமலேயே சென்று விட்டனர். இதுகுறித்து ஹோட்டல் நிர்வாகி மைக் பெல் கூறுகையில், கிளிண்டன்குடும்பத்தினர் ஹோட்டலுக்கு வந்தபோது, மின்சாரம் தடைபட்டது. இதனால் கிளின்டன் குடும்பத்திற்காக ஸ்பெஷலாக எதுவும் செய்யமுடியவில்லை.
இருப்பினும், மின்சாரம் இல்லாமல், எதெல்லாம் செய்ய முடியுமோ அவை அனைத்தும் தயார் செய்யப்பட்டு கிளிண்டன் குடும்பத்தினருக்கு அளிக்கப்பட்டதுஎன்றார்.
கிளிண்டன் ஹோட்டலில் இருந்தபோது, வடக்கு அயர்லாந்தில் இருந்து வந்த மீன் உணவை பரிசோதிக்க ஊழியர் ஜோனாதன் டன்ஹில் என்பவர் முயன்றபோது,அவரை கிளின்டனின் பாதுகாவலர்கள் தடுத்து விட்டனர்.
பில் மறந்து போன "பில்லுக்குரிய பணத்தை யார் கட்டுவார்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் மைக் பெல்.












Click it and Unblock the Notifications