தொடர்ந்து போராடுவோம் .. தபால் ஊழியர்கள்
சென்னை:
எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று அஞ்சல் துறை ஊழியர்கள் அறிவித்துஉள்ளனர்.
கடந்த 18.12.98 அன்று போட்ட ஒரு ஒப்பந்தத்தை நிறைவேற்றக் கோரியும், 15 அம்சக் கோரிக்கைகளைநிறைவேற்றக் கோரியும் டிசம்பர் 5-ம் தேதி முதல் தபால்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தபால் ஊழியர்களது போராட்டத்தை சட்டவிரோதமானது மத்திய அரசு அறிவித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்,வெள்ளிக்கிழமைக்குள் தங்களது போராட்டத்தை தபால் ஊழியர்கள் வாபஸ் பெற வேண்டும் என்று கூறியுள்ளது.இருப்பினும் ஊழியர்களது போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.
இதுகுறித்து வியாழக்கிழமை மாலை அஞ்சல் - ஆர்.எம்.எஸ் மாநில சங்கங்களின் இணைப்புக் குழுவின் தலைவர்கண்ணையன், கன்வீனர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:
மத்திய அரசு கொடுமையான சட்டங்களை அஞ்சல் ஊழியர்கள் மீது பயன்படுத்திடும் போது அதே சட்டங்களைதமிழக அரசும் எங்கள் மீது பயன்படுத்திடக் கூடாது என தமிழக முதல்வர் கருணாநிதியைக் கேட்டுக்கொள்கிறோம்.
மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் எங்களை மிரட்டி வருகிறார். அவரது மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம்.எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து போராடுவோம்.
தமிழகம் முழுவதும் 50 லட்சம் தபால்கள்தான் தேங்கி இருக்கிறது. எங்களது கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டவுடன் தேங்கியுள்ள தபால்களை ஓரிரு நாட்களில் இரவு - பகல் பாராது பட்டுவாடா செய்து விடுவோம்.
எங்கள் போராட்டத்திற்கு தந்தி, தொலைபேசி, ரயில்வே ஆகிய இலாகாவைச் சேர்ந்த ஊழியர்களும் ஆதரவுதெரிவித்துள்ளனர். தபால்துறை ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என அவர்களும் தர்ணாபோராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சுமூக முடிவு ஏற்படவில்லை என்றால் அவர்களும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில்ஈடுபடவிருக்கிறார்கள். நாங்கள் எத்தனை நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவிருக்கிறோமோஅத்தனை நாட்களுக்கு சம்பளம் மட்டும் தான் பிடித்தம் செய்யப்பட வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications