காஷ்மீர் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு 2 வீரர்கள் பலி

Subscribe to Oneindia Tamil

ஜம்மு:

பாகிஸ்தான் ஆதரவு லஸ்கர் -இ- தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்ததற்கொலைப்படை வீரர்கள் நடத்திய தாக்குதலில் 2 ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள்உயிரிழந்தனர்.

ஜம்முவுக்கு 200 கிலோமீட்டர் வடக்கே இருக்கும் பூஞ்ச் மாவட்டத்தின் மென்தார்பகுதியில் இருக்கும் இந்திய ராணுவ முகாம் மீது தீவிரவாதிகளின் தற்கொலை படைவீரர்கள் சனிக்கிழமை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 2 மத்திய ரிசர்வ் போலீஸ்படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த முகாமிலிருந்துதான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதிக்கு வீரர்கள்அனுப்பப்பட்டு வருகின்றனர்.இந்த முகாம் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிலிருந்து10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

கடுமையான பாதுகாப்பில் இருக்கும் மென்தார் ராணுவ முகாமுக்குள் பாகிஸ்தான்எல்லையைக் கடந்து திடீரென 2 தீவிரவாதிகள் புகுந்தனர். அங்கிருந்த வீரர்கள் மீதுசரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டனர். இதில் 2 பேர் கொல்லப்பட்டனர். 3 பேர்காயமடைந்தனர் என்றார்.

லஸ்கர் - இ - தொய்பா தீவிரவாத அமைப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் ஜம்மு - காஷ்மீர்பகுதியில் தற்கொலைப் படையை அறிமுகப்படுத்தியது. தற்போதைய தாக்குதலுக்குஇந்த அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அபு ஒசாமா நிருபர்களை தொலைபேசி மூலம்தொடர்பு கொண்டு கூறுகையில், எங்கள் அமைப்பைச் சேர்ந்த அபு சயாத்தும், அபுரிஜிவானும் ராணுவ முகாமை தாக்கினர். ராணுவ முகாமை தாக்கிய பின் அவர்கள்இருவரும் பத்திரமாக திரும்பி வந்து விட்டனர் என்றார்.

இந்த அமைப்பு ரம்ஜான் மாதத்தையொட்டி பிரதமர் வாஜ்பாய் அறிவித்துள்ள போர்நிறுத்தத்தை எதிர்த்து வருகிறது. போர் நிறுத்தம் நவம்பர் 28-ம் தேதிஅறிவிக்கப்பட்டது. தற்போது நடந்துள்ள தாக்குதல் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டபின் நடந்துள்ள மூன்றாவது தற்கொலை படை தாக்குதலாகும்.

முந்தைய தாக்குதல்களில் 8 பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர். 14 பேர்காயமுற்றனர். டிசம்பர் 2-ம் தேதி ஆனந்த்நாக்கில் இருக்கும் புறக்காவல் படை வீரர்கள்முகாம் மீது நடந்த தாக்குதலில் 6 மத்திய ரிசர்வ் போலீசார் கொல்லப்பட்டனர். 8 பேர்காயமுற்றனர்.

இரண்டாவது தாக்குதல் ஷிட்லூவில் நடந்தது. இதில் ஒரு ராணுவ அதிகாரியும், ஒருராணுவ வீரரும் கொல்லப்பட்டனர்.

தோடா மாவட்டத்திலுள்ள காண்டோ பகுதியில் இரண்டு தீவிரவாதிகள் ராணுவவீரர்களால் வெள்ளிக்கிழமை கொல்லப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+