சனிக்கிழமையும் இனி கோர்ட் இயங்கும்
சென்னை:
தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் சனிக்கிழமைகளிலும் நீதிமன்றங்கள் இயங்க உள்ளன.
நீதிமன்றங்களில் பணிநிலை, ஊதியம் ஆகியவற்றைப் பற்றி ஆராய நீதிபதி ஷெட்டி தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது.
இந்தக் கமிஷன் சமர்ப்பித்த அறிக்கையில், கீழ் நீதிமன்றங்களில் லட்சக்கணக்கில் வழக்குகள் தேங்கிக் கிடப்பது குறித்து கவலை தெரிவித்திருந்தது.
தற்போது நீதிமன்றங்கள் 5 நாட்கள் மட்டுமே செயல்படுகின்றன. இந்த வாரத்தில் 6 நாட்களாக மாற்றினால் வழக்குகள் தேக்கமடைவதுகுறையும் என்று கமிஷன் பரிந்துரை செய்தது.
மாநில அரசுகள் மற்றும் உயர்நீதிமன்றங்கள் ஆலோசனை செய்து இதை அமல்படுத்தலாம் என்று கருத்து தெரிவித்திருந்தது.
இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றம் ஆலோசனை நடத்தியது. வாரத்தில் 6 நாட்கள் நீதிமன்றங்கள் செயல்பட இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.வரும் ஜனவரி மாதம் முதல் நீதிமன்றங்கள் 6 நாட்கள் வேலை செய்யத் தொடங்கும்
இந்தத் திட்டம் அமலுக்கு வந்தால் மாஜிஸ்ட்ரேட் மற்றும் கீழ் நீதிமன்றங்களின் நீதிபதிகள் சனிக்கிழமைகளில் காலை 10.30 மணி முதல் பகல் ஒருமணி வரையிலும், நீதிமன்றப் பதிவாளர்கள் மாலை 4 மணி வரையிலும் பணிபுரிவார்கள்.












Click it and Unblock the Notifications