தாக்குதலில் உல்பா தலைவர் காயம்
Subscribe to Oneindia Tamil
அகர்தலா:
திரிபுரா மாநிலத்தில் பாதுகாப்புப் படை வீரர்களுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி (உல்பா) தீவிரவாதிகளின் தலைவர்பரேஷ் பரூவா காயமடைந்தார்.
இச்சம்பவத்தில் அவரது பாதுகாவலர் உயிரிழந்தார். கிழக்கு வங்கதேசம் அருகேயுள்ள சிட்டகாங்க் மலைத் தொடர்ப் பகுதியில் இந்த துப்பாக்கிச் சண்டைநடந்தது. இரு தரப்பினருக்கிடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், பரேஷ் பரூவா காயமடைந்தார்.
பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவிக்கையில், துப்பாக்கிச் சண்டையில் காயமடைந்த உல்பா தலைவர் பரேஷ் பரூவா சிகிச்சைக்காக டாக்காமருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவரது நிலை மிகவும் ஆபத்தாக உள்ளது என்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications