தமிழை செம்மொழியாக்க வேண்டும் ..பா.ஜ.க
ஈரோடு:
தமிழ் மொழியை செம்மொழியாக்க தமிழ் ஆர்வலர்கள் வைத்திருக்கும் கோரிக்கையை பிரதமர் வாஜ்பாயிடம் வலியுறுத்துவோம் என்று ஈரோட்டில்நடந்த மாநில பாரதீய ஜனதாக் கட்சி செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஈரோட்டில் பா.ஜ.க. மாநில செயற்குழுக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
கூட்டணிக் கட்சிகள் தங்கள் கருத்து வேறுபாடுகளை பத்திரிக்கையில் வெளிப்படுத்துவது கூட்டணியைப் பலவீனப்படுத்தும். இப்பிரச்னை குறித்து கூட்டணியின்தலைவர்கள் முடிவு மேற்கொள்ள வேண்டும்.
அயோத்திய பிரச்னையை ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றத்தில் கிளப்பி, அவையை நடக்க விடாமல் செய்யும் முயற்சியில், காங்கிரஸ், மற்றும்கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்பட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றன. இந்த முயற்சியை முறியடித்த கூட்டணிக் கட்சிகளுக்கு நன்றியைத்தெரிவித்துக் கொள்கிறோம்.
அடுத்து வரும் சட்டசபைத் தேர்தலில், தி.மு.க அரசு அமைய வேண்டும். இந்த அரசு வாஜ்பாய் அரசிற்கு உறுதுணையாக அமைய வேண்டும். தேசியகூட்டணியில் அங்கம் வகித்து வரும் கட்சிகள், தங்களுடைய கருத்து வேறுபாடுகளை வெளிப்படையாகத் தெரிவித்தால், அது கூட்டணியைப் பலவீனப்படுத்தும்.எனவே, கூட்டணியில் யார் யார் இடம் பெற வேண்டும் என்பதை தேசிய அளவில் வாஜ்பாயும், மாநில அளவில் கருணாநிதியும் முடிவு செய்ய வேண்டும்.
தமிழ் மொழியை செம்மொழியாக்க தமிழ் ஆர்வலர்கள் வைத்திருக்கும் கோரிக்கையை பிரதமர் வாஜ்பாயிடம் வலியுறுத்துவோம். வரும் புத்தாண்டிற்குமுன்னதாக இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.
அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைப் பகுதிகளை பதிவு செய்ய தமிழக அரசு மறுத்து வருகிறது. இதனைக் கைவிட்டு, இத்தகைய வீட்டு மனைகளைப் பதிவுசெய்து அங்கீகரம் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.
கரும்பில் 8.5 சதவீதம் பிழிதிறன் உள்ள கரும்புக்கு டன் ஒன்றிற்கு ஆயிரம் ரூபாய் அளிக்க வேண்டும். கரும்பிலிருந்து ஆல்கஹால் தயாரிக்க அனைத்துஆலைகளுக்கும் அனுமதியளிக்க வேண்டும்.
ராமநாதபுரம், சேலம், தேனி, புதுக்கோட்டை, மதுரை, திருவண்ணாமலை, சிவகங்கை, போன்ற மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டமாகஅறிவிக்க வேண்டும். இந்த மாவட்டங்களுக்கு உரிய வறட்சி நிவாரணம் அளிக்க வேண்டும்.
சீனா, வங்கத்திலிருந்து கச்சா பட்டு இறக்குமதி செய்து, நெசவாளர்கள் பயன்பெறும் வகையில் அரசு உதவ வேண்டும் போன்ற தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன.
-
Annamalai Delhi Trip LIVE: தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை! பாஜக தேசிய தலைவருடன் சந்திப்பு! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்










Click it and Unblock the Notifications