கழுத்தை நெரித்து மருமகளைக் கொன்ற மாமியார்
சென்னை:
சென்னையில், நீதிபதி மகள் மர்மமாக இறந்ததற்கு மாமியார் தான் காரணம் எனதெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அவரை போலீசார் கைதுசெய்துள்ளனர்.
சென்னை அரும்பாக்கத்தில் வசித்து வருபவர் நேமிநாதன். இவர் நீதிபதியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மகள் தாரகேசுவரி (30) இரு ஆண்டுகளுக்கு முன்வக்கீல் பாலாஜி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தாரகேசுவரியும்வக்கீல்.
திருமணத்திற்குப் பின் பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் கூட்டுக் குடும்பமாகவாழ்ந்து வந்தனர் தாரகேசுவரி,பாலாஜி தம்பதிகள். இவர்களுக்கு கார்த்திக் என்றஒன்றரை வயது மகனும் இருக்கிறார்.
சென்ற மாதம் 23-ம் தேதி தாரகேசுவரி உடல் கருகி இறந்தார். தாரகேசுவரியின் மரணம்குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தப்பட்டது. அப்போது தாரகேசுவரியின் தாயார்ஆர்.டி.ஒ.விடம் மனு ஒன்றை கொடுத்திருந்தார்.
தனது மகள் தீயில் கருகி இறந்து குறித்து தங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. மேலும்தங்கள் மகளை மாமியார் தான் கொடுமைப்படுத்திக் கொன்றிருக்கிறார் எனவும் அந்தமனுவில் தெரிவித்திருந்தார்.
புகாரின் அடிப்படையில் செம்பியம் உதவி கமிஷனர் தலைமையில் போலீசார்விசாரணை நடத்தினர். தாரகேசுவரியின் கணவர் பாலாஜி (31). மாமியார் சியாமளா(46) இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்திய பின் விடுதலைசெய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்தது. இதில் தாரகேசுவரிக்கும், அவரதுமாமியாருக்கும் அடிக்கடி சண்டை நடந்தது தெரிய வந்தது.
சம்பவ தினத்தன்று காலையும் தாரகேசுவரிக்கும், அவரது மாமியாருக்கும் இடையேசண்டை ஏற்பட்டுள்ளது. பின் தாரகேசுவரி தூங்கச் சென்று விட்டார். அவர்தூங்கும்போது, தூக்க மாத்திரை போட்டுக் கொள்ளும் வழக்கம் உடையவர்.
மாத்திரை போட்டுக் கொண்டு தாரகேசுவரி தூங்கியதும் சியாமளா அவரது கருத்தைநெரித்து கொன்றுள்ளார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications