திமுகவினருடன் கருணாநிதி தேர்தல் ஆய்வு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சட்டசபைத் தேர்தல் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக மாவட்ட வாரியாக தி.மு.க நிர்வாகிகளுடன் முதல்வர் கருணாநிதி ஆலோசனை நடத்தத்தொடங்கியுள்ளார்.

தஞ்சை மாவட்ட தி.மு.க.வினருடன் கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை10.30 மணிக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.

முதல்வரும், தி.மு.க தலைவருமான கருணாநிதி தலைமை தாங்கினார். தி.மு.க பொதுச்செயலாளர் அன்பழகன், பொருளாளர் ஆற்காடு வீராசாமி, துணைப்பொதுச்செயலாளர் க.சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தஞ்சை மாவட்ட அமைச்சர் கோ.சி மணி, பழனி மாணிக்கம் , மாவட்டச் செயலாளர் ஏ.வி சுப்பிரமணியம் மற்றும் நிர்வாகிகளுடன்கருணாநிதி ஆலோசனை நடத்தினார். அதன் பின் நிருபர்களை சந்தித்தார் கருணாநிதி.

அப்போது, சட்டமன்றத் தேர்தலில் ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்வதற்காக ஒவ்வொரு மாவட்டக் கழகத்தின் கூட்டத்தையும் அண்ணாஅறிவாலயத்தில் கழக அலுவலகத்தில் நடத்திக் கொண்டிருக்கிறோம். அந்த வரிசையில் தான் இப்போது தஞ்சை மாவட்ட தெற்கு பகுதிக் கழகத்தின்கூட்டத்தை நடத்தியிருக்கிறோம் என்றார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+