மாருதி ஊழியர்கள் நால்வர் சாகும் வரை உண்ணாவிரதம்
டெல்லி:
வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாருதி உத்யோக் நிறுவனத்தின்ஊழியர்களில் 4 பேர் திங்கள்கிழமை முதல் சாகும் வரை உண்ணாவிரதப்போராட்டத்தை துவக்கினர்.
வேலைநிறுத்தம் செய்து வரும் மாருதி நிறுவன ஊழியர்களில் 92 பேரை நிர்வாகம்சஸ்பெண்ட் செய்ததை வாங்கக் கோரி இவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாருதி உதயோக் நிறுவன ஊழியர் சங்க இணைச் செயலாளர் மதன்லால் சர்மா,தயாசந்த் யாதவ், மானேகிராம், டி.கே.செளஹான் ஆகியோர் உண்ணாவிரதம்துவங்கிய ஊழியர்கள்.
டெல்லியிலுள்ள மத்திய கனரக தொழிற் துறை அமைச்சர் மனோகர் ஜோஷிஅலுவலகம் முன்பு திங்கள்கிழமை காலை இவர்கள் போராட்டத்தைத் துவக்கினர்.
ஊழியர்களின் கோரிக்கை முழுவதும் ஏற்கப்படும் வரை தங்களது போராட்டம்தொடரும் என அவர்கள் கூறியுள்ளனர்.
25 பேர் டிஸ்மிஸ், 24 பேர் சஸ்பெண்ட்:
இதற்கிடையே, மாருதி நிறுவனத்தில் கதவடைப்பு அறிவிக்கப்படவில்லை என்றுமத்திய கனரக தொழில்துறை இணை அமைச்சர் வல்லபாய் கத்திரியா ராஜ்யசபையில்தெரிவித்தார்.
அவர் கூறுகையில், கதவடைப்பு இன்னும் அறிவிக்கப்படவில்லை. வேலைநிறுத்தத்தில்ஈடுபட்டுள்ள ஊழியர்களில் 162 பேர் மீண்டும் வேலைக்கு வந்தனர்.
மெதுவாக வேலை பார்த்தல், வன்முறையாக நடந்து கொண்டது போன்றதவறுகளுக்காக 24 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
25 பேர் வேலைக்கு வராத காரணத்திற்காக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள்வேலைக்கு வராததோடு, நிறுவனத்தில் உள்ள மெஷின்களுக்கும், பிறபொருட்களுக்கும் பெரும் சேதம் விளைவித்துள்ளனர்.
இதுதவிர 21 பேரின் பயிற்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications