திருச்சியில் 9000 குடிமக்கள் கைது

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

திருச்சி மாவட்டத்தில், இந்த ஆண்டு இதுவரை 9000 பேர் கள்ளச்சாராயம் காய்ச்சியதுதொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்ட மதுவிலக்கு கூடுதல் எஸ்.பி. ராஜசேகரன் இதுகுறித்து திருச்சியில்செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திருச்சி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை, கள்ளச்சாராயம் காய்ச்சியது, விற்றதுதொடர்பாக 9000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது 11,460 வழக்குகள்பதிவு செய்யப்பட்டுள்ளன.

பெரிய அளவிலான இந்த கைது தவிர, 52 கள்ளச் சாராய வியாபாரிகள் குண்டர்தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 14 லட்சம்லிட்டர் கள்ளச் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

10,000 இந்தியாவில் தயாரிக்கப்பட்ட போலி வெளிநாட்டு மது பாட்டில்கள் பறிமுதல்செய்யப்பட்டன. கள்ளச் சாராயத்தை எடுத்துச் செல்லப் பயன்படுத்தப்பட்ட 290வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. தவறு செய்தவர்கள் மீது ரூ. 18 லட்சம்அபராதத் தொகையும் வசூலிக்கப்பட்டது.

மது விலக்குப் போலீஸாரின் தொடர் முயற்சி காரணமாக மாவட்டத்தின் 80 கிராமங்கள்சாராயம் இல்லாத கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளன.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+