15 ஆண்டுகளில் வல்லரசாகும் இந்தியா
வாஷிங்டன்:
அடுத்த 15 ஆண்டுகளில் தெற்காசியாவின் அசைக்க முடியாத வல்லரசாக இந்தியா மாறும் என்று அமெரிக்கபுலனாய்வு ஏஜென்சியின் (சி.ஐ.ஏ.) அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
68 பக்கங்கள் கொண்ட சி.ஐ.ஏ.வின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதுதெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இன்னும் 15 ஆண்டுகளில் தெற்காசியாவின் அசைக்க முடியாத சக்தியாக இந்தியா மாறும். ஆனால் ராணுவ ரீதியில்வல்லரசாக இந்தியா மாறுவதால் அப்பகுதியில் நிலைத்தன்மை இருக்காது. பதற்றம் அதிகரிக்கும்.
இந்தியாவின் கடற்படை, அணு சக்தி ஆகியவை பிரமிக்கத்தக்க வகையில் வளர்ந்து விடும். பொருளதாரநிலையிலும் இந்தியா நல்ல வளர்ச்சியைப் பெறும். இந்தியாவின் முக்கியப் பிரச்சினைகளை ஓரம் கட்டும் விதமாக,பாகிஸ்தானுடனான அதன் மோதல் உள்ளது. இது எதிர்காலத்தில் இன்னும் அதிகரிக்கும்.
ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் நிலவும் குழப்பம் காஷ்மீரில் எதிரொலிக்கும். அங்கிருந்து இந்தியா மற்றும்தெற்காசியாவின் பல பகுதிகளுக்கும் பரவும். இதன் மூலம் இந்தியத் தரப்பு ஆக்ரோஷமான பதில் தாக்குதலில்ஈடுபடலாம்.
பாகிஸ்தானை விட ராணுவ ரீதியில் இந்தியா மிகப் பெரிய நாடாக உள்ளது. இது அப்பிராந்தியத்தில் இந்தியாவின்நிலையை மேலும் உயர்த்தும். இதுதவிர, கடல் பாதுகாப்பிலும் இந்தியா எதிர்காலத்தில் கூடுதல் கவனம் செலுத்தும்.இந்திய பெருங்கடல் முழுவதும் இந்தியாவின் ஆதிக்கம் வலுப்படும்.
இந்தியாவும், பாகிஸ்தானும் தங்களது பாதுகாப்பு கருதி அணு ஆயுதங்களைத் தயாரித்துக் குவிக்கும். இதுதவிரஏராளமான ஏவுகணைகளையும் இரு நாடுகளும் தயாரிக்கும்.
சீனாவைப் போல் இல்லாது, எதிர்காலத்தில் மேற்கத்திய நாடுகளுடன் இந்தியா நல்லுறவை வலுப்படுத்திக்கொள்ளும். இருப்பினும், எண்ணை தேவை மற்றும் பாகிஸ்தானைச் சமாளிப்பதற்காக அரபு நாடுகளுடனும்இந்தியா நட்புடன் இருக்கும்.
இந்தியாவின் வளர்ச்சியால், சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே மேலும் கசப்புணர்வு அதிகரிக்கும்.
மும்பை, டெல்லி, சென்னை, பெங்களூர் ஆகிய நகரங்கள் அபரிமிதமான வளர்ச்சியைக் காணும். இந்த நான்குநகரங்களை மையமாக வைத்தே எதிர்காலத்தில் இந்தியாவில் தொழில்நுட்ப நிறுவனங்கள் காலூன்றும்.இதேபோல, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் சாப்ட்வேர் துறை முக்கியப் பங்காற்றும்.
வளரும் நாடுகளிலேயே அதிக அளவில் ஆங்கிலம் பேசுவோரைக் கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது.இந்தியக் கல்வி முறை, லட்சக்கணக்கான அறிவியல், தொழில்நுட்ப வல்லுனர்களை உருவாக்குகிறது. இந்தியாவில்ஏராளமான தொழில்நுட்ப வல்லுனர்கள் இருக்கிறார்கள். அனைவரும் பணிபுரிய தயாராக இருக்கிறார்கள்.இதுதவிர, வெளிநாடுகளில் உள்ள எண்ணிலடங்கா இந்தியர்கள் மூலம், இந்தியாவுக்கும், வெளிநாடுகளுக்கும்இடையிலான தொடர்பு மேலும் வலுப்படும்.
பொருளாதாரத் துறையில் நல்ல வளர்ச்சியை இந்தியா பெற்றாலும் கூட இன்னும் லட்சக்கணக்கான இந்தியர்கள்வறுமையில் உழன்று கொண்டுள்ளனர். 2015-ம் ஆண்டுக்குள் வறுமையை ஒழிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.இதற்கு அது பெரிதும் நம்பியுள்ளது விவசாயத்தையே என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சி.ஐ.ஏ. அறிக்கையில், இந்தியா, ரஷியா, சீனா ஆகியவை இணைந்து அமைக்கத் திட்டமிட்டுள்ள பாதுகாப்புவளையம் குறித்து எதுவும் கூறப்படவில்லை.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications