அதிகாரப்பூர்வமாக புஷ் அதிபராகத் தேர்வு
வாஷிங்டன்:
அமெரிக்காவின் 43-வது அதிபராக ஜார்ஜ் புஷ் ஜூனியர் அதிகாரப்பூர்வமாக தேர்வுசெய்யப்பட்டார்.
தலைநகர் வாஷிங்டனில் கூடிய எலக்டோரல் பிரதிநிதிகள் கூட்டத்தில் ஜார்ஜ் புஷ்அடுத்த அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நவம்பர் 7-ம் தேதி நடந்த அதிபர் தேர்தலில் மக்கள் வாக்குகளை பெறத் தவறியும் கூட,எலக்டோரல் பிரதிநிகள் வாக்குகள் புஷ்ஷுக்கு ஆதரவாக கிடைத்ததால் அவர்அதிபராகியுள்ளார். அல் கோருக்கு மக்கள் வாக்குகள் அதிகம் கிடைத்ததுகுறிப்பிடத்தக்கது.
மொத்தம் உள்ள 538 எலக்டோரல் பிரதிநிதிகளில் ஒருவரைத் தவிர அனைவரும்கூட்டத்தில் கலந்து கொண்டனர். திங்கள்கிழமை இக்கூட்டம் நடந்தது. திங்கள்கிழமைபிற்பகல் வரை, அதிபராவதற்குத் தேவையான 271 வாக்குகளை புஷ் பெற்றார்.
கடந்த 112 ஆண்டுகளில் முதல் முறையாக மக்கள் வாக்குகளைப் பெறாத ஒருவர்அதிபர் பதவியில் அமரவுள்ளார். தற்போது புஷ் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுவிட்டதால், ஜனவரி 5-ம் தேதி கூடவுள்ள அமெரிக்க நாடாளுமன்றத்தின் காங்கிரஸ்சபையில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்படும். அதன் பிறகு 20-ம் தேதி புதிய அதிபராகபுஷ் பதவியேற்பார்.
அமெரிக்க வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு எக்கச்சக்ககுழப்பங்களுக்குப் பிறகு புதிய அதிபராக புஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 41 நாள்இழுபறிக்குப் பின் கோர் தனது தேர்தல் தோல்வியை ஒப்புக் கொண்டார். இதையடுத்துபுஷ் அதிபராவது உறுதியானது.
இதற்கிடையே தேர்தல் வெற்றிக்குப் பிறகு முதல் முறையாக தலைநகர் வந்துள்ள புஷ்,அமெரிக்க பொருளாதாரத் துறைத் தலைவர் ஆலன் கிரீன்ஸ்பானுடன் திங்கள்கிழமைகாலை உணவு உட்கொண்டார். அமெரிக்க பொருளாதார நிலைமை குறித்து இருவரும்பேசினர்.
அதன் பின்னர் காங்கிரஸ் சபையின் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சித்தலைவர்களுடன் அவர் பேசினார். புஷ்ஷுக்கு அனைத்து விதத்திலும்ஒத்துழைப்பதாக, அல் கோரின் ஜனநாயகக் கட்சிப் பிரதிநிதிகள் புஷ்ஷிடம்தெரிவித்தனர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications