காஷ்மீரில் சண்டை நிறுத்தம் நீட்டிக்கப்படும்?
டெல்லி:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தற்போது அமலில் உள்ள சண்டை நிறுத்தம் நீட்டிக்கப்படும்என்று தெரிகிறது. இதுதொடர்பான அறிவிப்பை இன்னும் சில நாட்களில் பிரதமர்வாஜ்பாய் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரம்ஜான் மாதம் முழுவதும் ஜம்மு காஷ்மீரில் ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்படும்என்று ஏற்கனவே பிரதமர் வாஜ்பாய் அறிவித்து தற்போது அது அமலில் உள்ளது.இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து சண்டை நிறுத்தத்தை நீட்டிக்கவேண்டும் என்று பல்வேறு தரப்புகளிலிருந்து கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து சண்டை நிறுத்தத்தை நீட்டிப்பது குறித்து பிரதமர் தரப்பில்ஆலோசனைகள் நடந்து வருகிறது. இதுதொடர்பான அறிவிப்பு, ஜம்மு காஷ்மீர் மாநிலமுதல்வர் பரூக் அப்துல்லாவிடம் ஆலோசனை நடத்திய பின் வெளியிடப்படும் என்றுபிரதமருக்கு நெருங்கிய வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
வியாழக்கிழமை ஸ்ரீநகரில் நடைபெறவுள்ள அனைத்துக் கட்சி ஹுரியத் மாநாட்டுக்கூட்டத்தில் எடுக்கப்படவுள்ள தீர்மானங்களை ஆராய்ந்த பின் இதுதொடர்பான இறுதிமுடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. தற்போது நடந்து வரும் ஹுரியத் மாநாட்டுக்கூட்டத்தில், சண்டை நிறுத்தத்திற்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் சண்டை நிறுத்த அறிவிப்புக்குப் பிறகு, பாகிஸ்தான் தனதுவாலாட்டத்தை வெகுவாக குறைத்துக் கொண்டுள்ளது. எல்லையைத் தாண்டி இந்தியப்பகுதிக்குள் நினைத்தபோதெல்லாம் சுட்டு வந்ததை நிறுத்தி விட்டது. அத்தோடு,எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்களிலும் திடீர்சோதனை நடத்தியது. மேலும், பாகிஸ்தான் போலீஸார், காஷ்மீரில் ஜிஹாத் நடத்தபணம் வசூலித்த ஹர்கத் முஜாஹிதீன் உறுப்பினர்கள் சிலரை கைது செய்தனர்.
இதற்கிடையே, சண்டை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டால், ராணுவத்திற்கு தகவல்சொல்லி வரும் நபர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று ராணுவ அதிகாரிகள்கவலை தெரிவித்துள்ளனர். இதுவரை 250க்கும் மேற்பட்ட இந்திய ராணுவத்திற்குதகவல் சொல்லும் நபர்கள், தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர்.
தற்போதைய சூழ்நிலையில், சண்டை நிறுத்தம் நீட்டிக்கப்படுவதற்கான அறிகுறிகள்பிரகாசமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications