கொலையில் முடிந்த கள்ளக் காதல் ..
சென்னை:
திருமணமான பெண்ணைக் காதலித்த ரவுடி, வெட்டிக்கொலை செய்யப்பட்டு பார்சல் செய்யப்பட்டு தெருவில் வீசப்பட்டார்.
சென்னை வேளச்சேரி அருகே சில நாட்களுக்கு முன்பு பார்சலில் ஆண் பிணம் ஒன்று கட்டப்பட்ட நிலையில் கிடந்தது. அவரது கை, கால்கள், தலை அனைத்துஉறுப்புக்களும் துண்டு, துண்டாக வெட்டப்பட்டு அட்டைப் பெட்டிக்குள் அடைக்கப்பட்டிருந்தது.
போலீஸார் பிணத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்திய போது, இறந்து போனது வாலிபர் என்றும் அவர் ஒரு ரவுடி என்றும் தெரிய வந்தது. இதையடுத்துஇவ்வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டது. ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணி:
சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்தவர் தனபால் (30). இவர் ஒரு ரவுடி. இவருக்கும், ராயப்பேட்டைப் பகுதியைச் சேர்ந்த கலா (40) என்ற திருமணமானபெண்ணுக்கும் கள்ளக்காதல் இருந்தது. கலாவுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. அவர் கணவனைப் பிரிந்து வாழ்ந்து வந்தார்.
கஞ்சா கலா:
ஆண் துணையின்றி குடும்பத்தைக் காப்பாற்ற முடியாமல் அவதிப்பட்டார் கலா. அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கஞ்சாத் தொழிலில்இறங்கி விட்டார். இதனால் அவருக்கு கஞ்சா கலா என்ற செல்லப் பெயர் வந்தது.
கஞ்சா விற்று பணம் சம்பாதித்து இரண்டு அடுக்குமாடி வீடு கட்டினார் கலா. இந்த நிலையில் கலாவுக்கும், தனபாலுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.இரண்டு பேரும் சேர்ந்து கஞ்சா தொழிலில் ஈடுபட்டனர். இருவருக்கும் அதிக பணம் கிடைத்தது. இதற்கிடையே கொலைச் சம்பவம் ஒன்றில் சிக்கிதனபால் சிறையில் அடைக்கப்பட்டார்.
இன்னொரு காதல்:
தனபால் போன நிலையில், ராயப்பேட்டையைச் சேர்ந்த இன்னொரு ரவுடி குமார் என்பவர் கலாவுக்குக் காதல் வலை விரித்தார். கலாவுக்கு மீண்டும்காதல் பிறந்தது. இருவரும் சேர்ந்து உல்லாசமாக இருந்தனர்.
இந்த நிலையில் தனபால் சிறையிலிருந்து வெளியே வந்தார். அப்போது கலா வீட்டில், குமார் இருந்ததைப் பார்த்து விட்டார். இதையடுத்து கலாவுக்கும்,தனபாலுக்கும் இடையே குமார் குறித்து அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டது.
குமார் வியாபார விஷயமாகத்தான் அடிக்கடி வீட்டுக்கு வருகிறார் என்று கலா, தனபாலிடம் கூறினார். ஆனால் இருவரும் உல்லாசமாக இருந்ததைதனபால் ஒரு நாள் பார்த்து விட்டார்.
இதையடுத்து, கலாவிடம் சண்டை போட்டார். கலாவால் குமாரையும் இழக்க முடியவில்லை. தனபாலையும் வெட்டி விட முடியவில்லை. இதை உணர்ந்துகொண்ட தனபால், கலாவை இன்னொருவருடன் பகிர்ந்து கொள்ள முடியாமல் தவித்தார். இதனால் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டது. இது குமாருக்கும்தெரிய வந்தது.
அதற்குப்பின் குமார், தனபாலை நைசாகப் பேசி காரில் அழைத்துச் சென்றார். ஆனால் எந்த சமரசப் பேச்சுக்கும் தனபால் படிந்து வரவில்லை.இதையடுத்து, குமார், தனபாலை கொன்று, உடல் உறுப்புக்களைத் துண்டு, துண்டாக வெட்டி பார்சல் கட்டி வேளச்சேரி அருகே வீசி விட்டார்.
பின்னர், கலாவும், குமாரும் தலைமறைவாகி விட்டனர். போலீஸார் அவர்கள் இருவரையும் தேடி வருகின்றனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications