முல்லைப் பெரியாறு அணையில் விரிசல் இல்லை
கோவை:
முல்லைப் பெரியார் அணை நில நிடுக்கத்தால் பாதிக்கப்படவில்லை. அவ்வாறு பாதிக்கப்பட்டதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என கோவையில்மாநில பொதுப் பணித்துறை மற்றும் வனத்துறை அமைச்சர் துரைமுருகன் திங்கள்கிழமை தெரிவித்தார்.
கோவையில் வனத் துறை சார்பில் நடந்த விளையாட்டுப் போட்டியை மாநிலப் பொதுப் பணித் துறை அமைச்சர் துரைமுருகன் துவக்கி வைத்தார். பின்னர்நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
சமீபத்தில் ஏற்பட்ட நில நிடுக்கத்தால் அணைகளில் எவ்வித பாதிப்பும் இல்லை. கேரள அரசு சொல்வது உண்மைக்குப் புறம்பானது. நில நிடுக்கம்ஏற்பட்ட பிறகும் அந்த அணைப் பகுதிகளை அதிகாரிகள் பார்வையிட்டனர்.
அணையிலிருந்து எப்போதும் நிலத்திற்கு அடியில் நீர் கசிவு இருக்கும். இந்த நீர்க் கசிவு ஒவ்வொரு நாளும் கணக்கெடுக்கப்பட்டு பராமரிக்கப்படும். இதன்படி நிலநிடுக்கம் ஏற்பட்ட நாளன்றோ, அதற்கு பிறகே நீர்க் கசிவு கணக்கில் எவ்வித மாற்றம் இல்லை. இதில் ஒரு துளி கூட அதிகமாக இல்லை.
எனவே, நில நிடுக்கத்தால் எந்தவித சேதாரமும் இல்லை என்பதை ஆதாராத்தோடு நிரூபிக்க முடியும். கேரள அரசு உண்மையை மறைத்து விட்டுபிரச்னையை உருவாக்கிக் கொண்டிருப்பது நல்லதல்ல.
நிலநிடுக்கம் ஏற்பட்டதற்கு முன்பு, அணை பலகீனமாக இருப்பதாகச் சொன்னார்கள். நமது இன்ஜினியர்கள் பலமாக இருப்பதாகச் சொன்னார்கள்.ஆனால், இதற்கு முடிவு ஏற்படாது என முதல்வர், மத்திய அரசின் உதவியை நாடினார். மேலும் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி மத்தியநீர்வளக் குழு பார்வையிட்டு, அணையை பரிசோதனை செய்தது. இதில், அணை உறுதியாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதன் பிறகு நிலநடுக்கத்தைக் காரணம் காட்டி காலம் தாழ்த்த கேரள அரசு முடிவு செய்துள்ளது. பேபி அணை பலவீனமாக இருப்பதாகக் கூறினர். நூறுஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த அணை இப்போது கட்டியது போல் உறுதியாக இருப்பதை மத்தியக் குழு ஆய்வு செய்து முடிவைத் தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வு குறித்த முடிவுகள் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும். இது குறித்து உச்சநீதிமன்றம் முடிவு செய்யும் என்றார் துரைமுருகன்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications